Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, December 29, 2021

மேன்மையான மேட்டூர் மாநாடு


29.12.2021, இன்று, மேட்டூர் கிளையின் 10வது மாநாடு, மேட்டூரில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு  கிளை தலைவர் தோழர் J. மணி, தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக சங்க கொடியை தோழர் R. ரத்தினவேலு, TT ஏற்றி வைத்தார். கிளை பொருளர் தோழர் L. வெங்கடேசன், அஞ்சலியுறை நிகழ்த்த, கிளை செயலர் தோழர் M. கோபாலன்,  அனைவரையும் வரவேற்றார்.  

மாவட்ட செயலர் தோழர் E. கோபால், மாநாட்டை முறைப்படி துவக்கிவைத்து, துவக்கவுரை வழங்கினார். மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜு, மாவட்ட தலைவர் தோழர் S. ஹரிஹரன் கருத்துரை வழங்கினார்கள். 

பொருளாய்வு குழுவில், செயல்பாட்டு அறிக்கை,  வரவு செலவு அறிக்கை, சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் தோழர்கள் J. மணி, TT தலைவராகவும், M. கோபாலன், JE செயலராகவும், L. வெங்கடேசன், TT  பொருளாராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை, BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழர்கள்  K. ராஜன் மற்றும் P. செல்வம், AIBSNLPWA சேலம் மாவட்ட தலைவர் தோழர் K. P. ராஜமாணிக்கம், ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தோழர் M. கோபாலன்,  நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார். 

மாநில மாவட்ட மாநாட்டு நிதி இரண்டாவது தவணை  ரூ10,000/- வழங்கப்பட்டது. (ஏற்கனவே ரூ 5,000/- வழங்கப்பட்டிருந்தது.) சுவையான சிற்றுண்டி  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டு தயாரிப்புகள் நன்றாக இருந்தது.  புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு, சேலம் மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. 

தோழமையுடன்,
E. கோபால், 
மாவட்ட செயலர்