29.12.2021, இன்று, ஓமலூர் கிளையின் 10வது மாநாடு, ஓமலூரில், சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு மூத்த தோழர் N. கௌசல்யன், தலைமை ஏற்க, மூத்த தோழர் A. சிவலிங்கம் சங்க ஏற்றி வைத்தார். கிளை பொருளர் தோழர் T. கார்த்திகேயன், அஞ்சலியுறை நிகழ்த்த, கிளை செயலர் தோழர் S. சமரன், அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட பொருளர் தோழர் P. தங்கராஜு, மாநாட்டை முறைப்படி துவக்கிவைத்து, துவக்கவுரை வழங்கினார். மாவட்ட செயலர் தோழர் E. கோபால், மாநாட்டு பேருரை வழங்கினார்.
பொருளாய்வு குழுவில், செயல்பாட்டு அறிக்கை, வரவு செலவு அறிக்கை, சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில் தோழர்கள் N. கௌசல்யன், தலைவராகவும், S. சமரன், TT செயலராகவும், T. கார்த்திகேயன், TT பொருளாராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை, BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழர்கள் K. ராஜன் மற்றும் P. செல்வம், ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தோழர் T. கார்த்திகேயன், TT நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்தார்.
மாநில மாவட்ட மாநாட்டு நிதி முதல் தவணை ரூ5,000/- வழங்கப்பட்டது. சுவையான உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டு தயாரிப்புகள் நன்றாக இருந்தது. புதியதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு, சேலம் மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.