Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, December 29, 2021

ஊரக கிளைகள் மாநாடுகள் நிறைவு!


அருமை தோழர்களே! கடந்த 20.12.2021 தேதியன்று பரமத்தி வேலூரில் துவங்கி, இன்று, 29.12.2021 மேட்டூர் வரை 8 ஊரக கிளைகளின் மாநாடுகள் நிறைவு பெற்றுள்ளது. இது போக, சேலம் GM அலுவலக கிளை மாநாடு நிறைவு பெற்றுள்ளது. அத்துணை மாநாடுகளும் சிறப்பாக இருந்தது. அத்துணை மாநாட்டிலும், மாநில, மாவட்ட மாநாட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது. அமைப்பு ரீதியாக 26 கிளைகளை 12 கிளைகளாக இணைக்கும் மாவட்ட செயற்குழு முடிவின் படி, 9 மாநாடுகள் முடிந்துள்ளது. எஞ்சியுள்ள சேலம் நகர 3 கிளைகளின் மாநாடுகள் 04.01.2022 அன்று நடைபெறவுள்ளது.

அதற்கு அடுத்து, மாவட்ட மாநாடு நடைபெறவுள்ளது.  தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை நிர்வாகிகள் அனைவருக்கும் தோழமை வாழ்த்துக்கள். 9 மாநாட்டிலும், மாவட்ட செயலருடன், கலந்து கொண்ட மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் P. தங்கராஜு, K.  ராஜன் P. செல்வம் பணி போற்றுதலுக்குரியது, பாராட்டுக்குரியது.

வாழ்த்துக்களுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்