Forum of BSNL Executive Associations என்ற பதாகையின் கீழ், AIGETOA - SNEA - AIBSNLEA அதிகாரிகள் சங்கங்கள், 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் போராடி வருகிறார்கள்.
சேலம் GM அலுவலகத்தில், மூன்று நாள் உண்ணாவிரத போராட்டம், நேற்று, 28.12.21 துவங்கியது. இரண்டாம் நாள் போராட்டமான இன்று (29.12.21) சேலம் மாவட்ட BSNLEU சார்பாக மாவட்ட தலைவர் தோழர் S. ஹரிஹரன், போராட்ட களத்திற்கு சென்று, போராட்டத்தை வாழ்த்தி கருத்துரை வழங்கினார்.
மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் R. முருகேசன், D. கவிதா, GM அலுவலக கிளை செயலர் தோழர் R. ஸ்ரீனிவாசராஜூ, ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Forum அமைப்பின் தொடர் போராட்டம் வெல்லட்டும் என மாவட்ட சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.