Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, December 26, 2021

உற்சாகமாக நடைபெற்ற நாமக்கல் மாநாடு


23.12.2021, மாலை, நாமக்கல் நகர ஊரக கிளைகள் இணைந்த, 10வது மாநாடு, நாமக்கல்லில், சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு நகர கிளை தலைவர் தோழர் R. ராஜகோபால் தலைமை ஏற்க, மூத்த தோழர் C. தங்கவேல், சங்க கொடியை ஏற்றி வைத்தார். தோழர் K. செல்வராஜ்ஊரக கிளை செயலர் அஞ்சலியுறை நிகழ்த்த, தோழர் M. பாலசுப்ரமணியம், நகர கிளை செயலர், அனைவரையும் வரவேற்றார்.

ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், தோழர் S. தமிழ்மணி,  தமிழ் மாநில உதவி தலைவர் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். தோழர் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர், கருத்துரை வழங்க,  தோழர் E. கோபால், மாவட்ட செயலர், மாநாட்டு சிறப்புரை வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற பொருளாய்வு குழுவில், செயல்பாட்டு அறிக்கை, நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஏகமனதாக ஏற்கப்பட்டது. புதிய  நிர்வாகிகள் தேர்வில், இரண்டு  கிளைகள் அமைப்பு ரீதியாக, ஒன்றாக இணைக்கப்பட்டு, தோழர் R. ராஜகோபால், JE, தலைவராகவும், தோழர் M. பாலசுப்ரமணியம், OS, செயலராகவும், M. மாதேஸ்வரன், TT பொருளாராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழர்கள் P. தங்கராஜு,  M. சண்முகம், K. ராஜன், P. செல்வம்,  கிளை செயலர்கள் தோழர்கள் N.  பாலகுமார் (GM அலுவலகம்), R. ரமேஷ், (வேலூர்), மூத்த தோழர்கள் V. கோபால், K. M. செல்வராஜூ ஆகியோர் வாழ்த்தி, வாழ்த்துரை வழங்கினார்கள்.  கிளை பொருளர் தோழர் M.மாதேஸ்வரன்,  நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார். 

அமைதியான இடம், அன்பான உபசரிப்பு, சுவைமிகு உணவு, விளம்பரங்கள், என மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது. மாநில, மாவட்ட மாநாட்டு நிதி, முதல் தவணை ரூ. 20,000/- வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் பணி சிறக்க சேலம் மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்