24.12.2021, காலை, ராசிபுரம் கிளையின் 10வது மாநாடு, தோழர் S. கருப்பண்ணன் நினைவு அரங்கத்தில் ( BSNL அலுவலகம், ராசிபுரம்) சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு, தோழர் V. ராஜ்குமார், தலைமை தாங்கினார், மூத்த தோழர் R. ஜெயபாரதி, சங்க கொடியை ஏற்ற, கிளை செயலர் தோழர் P. M. ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.
ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், தோழர் S. தமிழ்மணி, தமிழ் மாநில உதவி தலைவர் மாநாட்டை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். தோழர் P. தங்கராஜு, மாவட்ட பொருளர், கருத்துரை வழங்க, தோழர் E. கோபால், மாவட்ட செயலர், மாநாட்டு சிறப்புரை வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற பொருளாய்வு குழுவில், செயல்பாட்டு அறிக்கை, நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, ஏகமனதாக ஏற்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வில், தோழர் K. தங்கவேல், TT, தலைவராகவும், தோழர் S. கணேசன், TT, செயலராகவும், V. ராஜ்குமார் ,TT பொருளாராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழர்கள் K. ராஜன், P. செல்வம், ஆகியோர் வாழ்த்தி, வாழ்த்துரை வழங்கினார்கள். கிளை உதவி செயலர் தோழர் K. சின்னத்துரை, நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார்.
சிறப்பான மாநாட்டு அரங்கம், அன்பான உபசரிப்பு, சுவைமிகு உணவு, விளம்பரங்கள், ஒப்பந்த ஊழியர் பங்கேற்பு என மாநாட்டு ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தது. மாநில, மாவட்ட மாநாட்டு நிதி, முதல் தவணை ரூ. 14,000/- வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகள் பணி சிறக்க சேலம் மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.