Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, May 6, 2021

குடும்பங்களுக்கு நிதி உதவி


கொரோனா பெருந்தொற்றால் உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக BSNLஊழியர் சங்கத்தின் கருத்து


கொரோனா பெருந்தொற்றால் உயிரிழக்கும் ஊழியர்களின் குடும்பத்தாருக்கு நிதி உதவி செய்வது தொடர்பாக BSNL நிர்வாகம் சில முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. 03.05.2021 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் மையக்கூட்டத்தில் இது தொடர்பாக விவாதித்து, கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. நிர்வாகத்திற்கும் அந்த முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு மற்றும், BSNL கார்ப்பரேட் அலுவலக Sr.GM(SR) அவர்களுக்கும் 03.05.2021 அன்று நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் அடிப்படையில், BSNL ஊழியர் சங்கத்தின் கருத்துக்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு, DoTயின் உத்தரவின் படி பத்து லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் 21.04.2021 மற்றும் 29.04.2021 ஆகிய தேதிகளில் கடிதம் கொடுத்துள்ளது. BSNL ஊழியர் சங்கத்தின் இந்த கோரிக்கையினை, நிர்வாகம் ஏற்றுக் கொள்ளாதது, வருத்தத்திற்குரியது. இந்த பின்னணியில், கீழ்கண்ட ஆலோசனைகளை, BSNL ஊழியர் சங்கம் முன்வைக்கிறது.

அ) BSNL நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக பணியாற்றிய ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யும் கடமையிலிருந்து, BSNL நிர்வாகம் நழுவக் கூடாது. எனவே, DoTயின் பரிந்துரையின் சாராம்சத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, BSNL நிர்வாகம், குறைந்த பட்சம் ஐந்து லட்ச ரூபாய்களையாவது, இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு வழங்க வேண்டும்.

ஆ) ஒவ்வொரு ஊழியரிடமிருந்து ரூபாய் 500/-ம், அதிகாரிகளிடம் இருந்து ரூ1,000/-ம் நிதியாக நிர்வாகம் பிடித்தம் செய்து, அதன் மூலம், மேலே குறிப்பிடப்பட்ட உதவியோடு, இந்த நிதியிலிருந்தும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கலாம். ஊழியர்களிடம் இருந்து தொகை பிடித்தம் செய்யப்படுவதை, தனிப்பட்ட ஊழியர்களின் விருப்பத்தோடு செய்யவேண்டும்.

இ) மேற்கண்ட இரண்டு வழிகளிலும் சேர்த்து, கொரோனா நோயால் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு மொத்தமாக பத்து லட்ச ரூபாய்கள், நிதி உதவியாக வழங்கப்பட வேண்டும்.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல்: மத்திய / மாநில சங்கங்கள்