05.11.2020 அன்று BSNL CGM ஏற்றுக் கொண்ட பிரச்சனைகளை உடனடியாக அமலாக்கவும், சேவையை மேம்படுத்தவும், அனைத்து சங்க கூட்டத்தை கூட்டவும் வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த தமிழ் மாநில BSNLEU - TNTCWU சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது. அதன்படி, 11.12.2020 அன்று கிளைகளில் போராட்டம் நடத்தப்பட்டது.
BSNLEU - TNTCWU சேலம் நகர கிளைகள் சார்பாக, இன்று 11.12.2020, செவ்வை தொலைபேசி நிலையத்தில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, BSNLEU மாவட்ட தலைவர் தோழர் S. ஹரிஹரன் தலைமை தாங்கினார்.
கோரிக்கைகளை விளக்கி, TNTCWU மாவட்ட தலைவர் தோழர் K. ராஜன், மாவட்ட செயலர் தோழர் M. செல்வம் கருத்துரை வழங்கினார்கள். BSNLEU சேலம் மாவட்ட செயலர் தோழர் E. கோபால் சிறப்புரை வழங்கினார்.
தோழர் சக்திவேல் BSNLEU மாவட்ட அமைப்பு செயலர் நன்றி கூறி போராட்டத்தை முடித்து வைத்தார். தோழர் P. செல்வம், TNTCWU மாவட்ட உதவி தலைவர், ஆர்ப்பாட்ட கோஷங்களை எழுப்பினார்.
திருச்செங்கோடு, ஆத்தூர், ராசிபுரம், பரமத்தி வேலூர் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.