டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு தொடர்ந்து BSNLEU சங்கம் ஆதரவு தெரிவித்து வருகிறது. இரண்டு முறை நாடு தழுவிய ஆதரவு ஆர்ப்பாட்டங்கள், அட்டை அணிதல் என தொடர்ந்து இயக்கங்கள் நடத்தி வருகிறோம்.
சமீபத்தில் நடைபெற்ற நமது அகில இந்திய மைய கூட்டத்தில், போராடும் விவசாயிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடை வழங்க முடிவு எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், இன்று, 29.12.2020, டில்லி போராட்ட களத்திற்கு நேரில் சென்று, நமது அகில இந்திய உதவி தலைவர் தோழர் R.S.சௌகான், ஹரியானா மாநில செயலர் உள்ளிட்ட தோழர்கள் விவசாயிகள் சங்க தலைவர்களிடம் காசோலை வழங்கினர்.
விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!