Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, December 25, 2020

போராட்ட களத்தில் நாம்


ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, BSNLEU - TNTCWU தமிழ் மாநில சங்கங்கள் சார்பாக, 22.11.2020 அன்று சென்னை CGM அலுவலகத்தில் நடைபெற்ற பெருந்திரள் உண்ணாவிரத போராட்டத்திற்கு சேலத்திலிருந்து தனி வாகனம் ஏற்பாடு செய்து சென்னைக்கு பயணமானோம்.

நமது மாவட்டத்திலிருந்து 65 தோழர்கள் (10 பெண்கள் உட்பட) கலந்து கொண்ட இந்த போராட்டத்தில், மாநிலம் முழுவதிலுமிருந்து சுமார் 700 தோழர்கள் பங்குபெற்றனர். 

கடும் பொருளாதார நெருக்கடியையும் பொருட்படுத்தாமல், போராட்ட குணாம்சத்தோடு இயக்கத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு, இரண்டு மாவட்ட சங்கங்கள் சார்பாக, நெஞ்சு நிறை நன்றிகள்.

தோழமையுடன்,
E.  கோபால்,
மாவட்ட செயலர், BSNLEU
M.  செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU