Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, December 29, 2020

IDA முடக்கத்திற்கு எதிரான வழக்கு!


IDA முடக்கத்திற்கு எதிரான BSNL ஊழியர் சங்கத்தின் வழக்கு கேரள உயர் நீதி மன்றத்தில் விசாரணக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. 


பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு அக்டோபர், 2020, ஜனவரி மற்றும் ஏப்ரல் 2021 ஆகிய மூன்று தவணை IDAக்களை முடக்க மத்திய மோடி அரசாங்கம் முடிவு செய்துள்ளது.  இந்த மூன்று தவணை IDAக்களும் 01.07.2021 முதல்தான் சேர்த்து வழங்கப்படும்.  ஆனால் நிலுவை தொகைகள் வழங்கப்பட மாட்டாது.  பஞ்சப்படி முடக்கத்திற்கான, DPE உத்தரவை ஏற்று, BSNL கார்ப்பரேட் அலுவலகமும் அதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது.

BSNLல் உள்ள ஊழியர்களுக்கு இந்த பஞ்சப்படி முடக்கம் பொருந்தாது என BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு, BSNL CMDக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இதற்கிடையே, FACT தொழிலாளர்கள் வழக்கில், கேரள உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், பஞ்சப்படியை முடக்கும் BSNL நிர்வாகத்தின் உத்தரவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையம் முடிவு செய்தது.  

அதன் அடிப்படையில் BSNL ஊழியர் சங்கத்தின் கேரள மாநில செயலர், தோழர் C.சந்தோஷ் குமார், கேரள உயர் நீதி மன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.  BSNL ஊழியர் சங்கத்தின் ரிட் மனு W.P(c) 29212-2020 என்ற எண்ணில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது.  விடுமுறைக்கு பின், 2021 ஜனவரி 4ஆம் தேதி நீதிமன்றம் செயல்பட துவங்கும் போது இந்த வழக்கு விசாரணைக்கு வரும்.

தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்

தகவல்: மத்திய சங்கம்