நேற்று, 10.12.2020, சேலம் மாவட்ட சேம நல வாரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நமது BSNLEU சங்க பிரதிநிதியாக, தோழர் R. ராதா கிருஷ்ணன், AOS(TG), O/o GM., கலந்து கொண்டார்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.
1. சேம நல நிதியிலிருந்து UTILITY LOAN என்ற வகையில் உறுப்பினர்களுக்கு கடன் வழங்க நமது தரப்பில் கோரியிருந்தோம். நமது கோரிக்கை எற்க்கப்பட்டு, இருக்கிற பத்து லட்ச ரூபாய் நிதியில், 200 உறுப்பினர்களுக்கு, தலா ரூ 5,000 வீதம் கடன் வழங்கப்படும். 10 தவணைகளில், கடன் பிடித்தம் செய்யப்படும். 5 சதவீத வட்டி வசூலிக்கப்படும். 31.12.2020 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2021 ஜனவரி முதல் வாரத்தில் பட்டுவாடா செய்யப்படும். 2021 பிப்ரவரி மாதம் முதல் பிடித்தம் துவங்கும்.
2. 01.04.2021 அன்று 20 / 30 வருடங்கள் பணி நிறைவு செய்பவர்களுக்கு, முறையே, ரூ 2,000 / ரூ 3,000, WELFARE GIFT வழங்கப்படும்.
3. செவ்வாய்பேட்டை தொலைபேசி நிலைய, LIFT பழுது சரி செய்ய ரூ 57,000 கடன் வழங்கப்படும். 2021 மார்ச் மாதத்துக்குள் நிர்வாகத்தால், வாரியத்திற்கு, கடன் திரும்ப செலுத்தப்படும்.
4. காலியாகவுள்ள WELFARE ASSISTANT பணியிடம் விரைந்து நிரப்பப்படும்.
5. வாரிய கமிட்டி உறுப்பினர்களுக்கு, HONORARIUM தொகை விரைந்து பட்டு வாடா செய்யப்படும்.
6. கோட்ட பொறியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் மூன்று மாதத்திற்குள் திரும்ப செலுத்த வலியுறுத்தப்படும்.
E. கோபால்,
மாவட்ட செயலர்