சென்னை கூட்டுறவு சங்கத்தில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிராக 03.08.2020 அன்று அனைத்து மட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என தமிழ் மாநில BSNLEU, NFTE, SNEA மற்றும் AIBSNLEA ஆகிய சங்கங்கள் கூட்டாக அறைகூவல் கொடுத்திருந்தன.
நமது மாவட்ட சூழலுக்கேற்ப, இன்று, 04.08.2020 சேலம் மாவட்ட BSNLEU , SNEA, AIBSNLEA சார்பாக, கூட்டாக மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் சேலம் PGM அலுவலகத்தில், நடைபெற்றது. போராட்டத்திற்கு தோழர்கள் K . ராஜன் (BSNLEU), R . மனோகரன் (SNEA) கூட்டு தலைமை தாங்கினார்.
தோழர் சக்திவேல் (BSNLEU) துவக்கவுரை வழங்கினார். கோரிக்கைகளை விளக்கி தோழர்கள் R . நாகராஜன் (AIBSNLEA), P . பொன்ராஜ் (SNEA), E . கோபால் (BSNLEU), சிறப்புரை வழங்கினார்கள். தோழர் N . பாலகுமார் (BSNLEU) நன்றி கூறி, போராட்டத்தை முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்