Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, July 31, 2020

சேலம் மக்களவை தொகுதி பாராளுமன்ற உறுப்பினரிடம் மகஜர் வழங்கப்பட்டது



31.07.2020, இன்று, சேலம் பாராளுமன்ற   உறுப்பினர் உயர்த்திரு. S .R .பார்த்திபன், அவர்களை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில், சந்தித்து, AUAB சார்பாக, BSNL நிறுவனத்திற்கு, 4G சேவை கோரி மனு வழங்கப்பட்டது. நம்முடைய கோரிக்கையின் சாராம்சத்தை பொறுமையாக கேட்ட MP அவர்கள், பாராளுமன்றத்தில் நிச்சயமாக இது சம்மந்தமாக கேள்வி எழுப்ப உறுதி அளித்தார். கேள்வி எழுப்ப வசதியாக கூடுதல் விவரங்களுடன் ஓரு அறிக்கையும் நம்மிடம்  கோரினார். 

நிகழ்வில், AUAB சார்பாக தோழர்கள் E .  கோபால், M . விஜயன், K . ராஜன், R .ஸ்ரீனிவாசன், சக்திவேல்,(BSNLEU), சேகர், பொன்ராஜ், ஸ்ரீனிவாசன் (SNEA), V. சண்முகசுந்தரம் (AIBSNLEA) உள்ளிட்ட தோழர்களோடு சுமார் 30 தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

கூடுதலாக, BSNLEU கிளை செயலர்கள் தோழர்கள் பாலகுமார், சுப்பிரமணி, முன்னணி தோழர்கள் ஜோதி, பத்மநாபன் உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்