05.08.2020, இன்று, மாநிலங்களவை பாராளுமன்ற உறுப்பினர் உயர்த்திரு. N . சந்திரசேகரன் அவர்களை மேட்டூர் அணையில் உள்ள அவரது அலுவலகத்தில், சந்தித்து, AUAB சார்பாக, BSNL நிறுவனத்திற்கு, 4G சேவை கோரி மனு வழங்கப்பட்டது.
நம்முடைய கோரிக்கையின் சாராம்சத்தை பொறுமையாக உள்வாங்கிய MP அவர்கள், மேல் நடவடிக்கைக்கு ஆவண செய்ய உறுதி அளித்தார்.
சேலம் மாவட்ட AUAB சார்பாக தோழர்கள் E . கோபால், P . செல்வம், K . ராஜன், J. மணி, சக்திவேல்,(BSNLEU), G. சேகர், P . பொன்ராஜ், V. செந்தில் (SNEA), உள்ளிட்ட தோழர்களோடு சுமார் 20 தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கூடுதலாக, BSNLEU மேட்டூர் கிளை செயலர் தோழர் M . கோபாலன், முன்னணி தோழர்கள் வெங்கடேசன், உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்