நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு A.K.P.சின்ராஜ் அவர்களிடம் சேலம் மாவட்ட AUAB சார்பாக மகஜர் வழங்கப்பட்டது.
06.07.2020 அன்று நடைபெற்ற அகில இந்திய AUAB கூட்டத்தில், 4G சேவையினை BSNL உடனடியாக வழங்க வேண்டும், BSNLன் புத்தாக்க திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மனு கொடுக்கும் இயக்கத்தை நாடு முழுவதும் நடத்திட அகில இந்திய AUAB
அறைகூவல் விட்டிருந்தது.
அதன்படி, 29.07.2020 அன்று சேலம் மாவட்ட AUAB சார்பாக, நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உயர்த்திரு. A . K . P . சின்ராஜ் அவர்களை ராசிபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து மகஜர் வழங்கப்பட்டது. அவசரப்பணி காரணமாக, வெளியில் கிளம்ப வேண்டிய சூழலில் இருந்தபோதும், நம்முடைய கோரிக்கையின் சாராம்சத்தை பொறுமையாக கேட்ட MP, உடனடியாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருக்கு இது சம்மந்தமாக கடிதம் எழுதுவதாக உறுதி அளித்தார்.
AUAB சார்பாக தோழர்கள் E . கோபால், S . தமிழ்மணி, S . ஹரிஹரன், P . தங்கராஜு,(BSNLEU), பொன்ராஜ், ஸ்ரீனிவாசன் (SNEA), V. சண்முகசுந்தரம் (AIBSNLEA) உள்ளிட்ட தோழர்களோடு சுமார் 40 தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கூடுதலாக, BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் குமாரசாமி, ராஜன், செல்வம், சக்திவேல், கிளை செயலர்கள் தோழர்கள் பாலகுமார் (GM அலுவலகம்), சுப்பிரமணி (STR ), அருள்மணி (ஆத்தூர் நகரம்), வேல்விஜய் (ஆத்தூர் ஊரகம்), பரந்தாமன் (பள்ளிபாளையம்), கந்தசாமி (இளம்பிள்ளை), இளங்கோவன் (செவ்வை), முன்னனி தோழர்கள் ராஜலிங்கம், ஜோதி, வரதப்பன், பத்மநாபன், திலகர், சின்னசாமி, நாராயணன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்