லடாக் பகுதியில், மொபைல் சேவைகள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் 54 மொபைல் டவர்கள் அமைக்க நரேந்திர மோடி அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக USO நிதியிலிருந்து பணம் வழங்கப்படும்.
ஆனால் இந்த டவர்களை நிர்மாணிக்கப்போவது அரசுத்துறை நிறுவனமான BSNLஅல்ல. மாறாக முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் தான். BSNLஐ காப்பாற்ற போவதாக உதட்டளவில் பேசிக் கொண்டே, ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருவது இவ்வாறு தான். இதே மோடி அரசாங்கம் தான் BSNL நிறுவனத்தை 4G சேவைகளை துவங்க விடாமல் இருப்பதற்காக அதன் டென்டரை ரத்து செய்துள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
மக்கள் அனைவரும் BSNLதான் அரசு துறை நிறுவனம் என நினைக்கிறார்கள். ஆனால் தற்போது, மோடி அரசாங்கத்திற்கு நெருக்கமானது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் என்பதை மக்கள் உணர்ந்து இருப்பார்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய சங்க இணையம்