Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, March 10, 2020

மத்திய செயற்குழு முடிவுகள்



குஜராத் மாநிலம் வதோதராவில் 2020, மார்ச் 6 & 7 தேதிகளில் நமது மத்திய செயற்குழு நடைபெற்றது. VRS க்கு பிந்தைய நிலையில் நடைபெற்ற இந்த செயற்குழுவில், BSNL புத்தாக்கம், ஊழியர் தரப்பு கோரிக்கைகள், அமைப்பு நிலை உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. 

மத்திய செயற்குழுவின் முடிவுகள் சுருக்கமாக: 

1. விரைவில் BSNL புத்தாக்கம் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில், மத்திய சங்கம் AUAB மூலமாக BSNL, 4G சேவைகளை உடனடியாக துவங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த மத்திய செயற்குழு நமது மத்திய சங்கத்தை கேட்டுக் கொள்கிறது. 

2. ஊதிய பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்கி, விரைவில் ஊதிய உடன்பாட்டில் கையெழுத்திடுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய சங்கத்தை இந்த செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
  
3. விருப்ப ஓய்வு திட்டத்திற்கு பின் உறுப்பினர் எண்ணிக்கை மிக கடுமையாக சரிந்துள்ளது.  இந்த பின்னணியில், குறிப்பாக மாவட்ட சங்கங்களின் அமைப்பு சங்கமாக இந்த மத்திய செயற்குழு, அக்கறையுடன் விவாதித்தது.  மறு சீரமைப்பு தொடர்பாக கார்ப்பரேட் அலுவலகமும், விரைவில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் விவாதிக்க உள்ளது.  CEC உறுப்பினர்களிடம் விவாதித்து, இந்த பிரச்சனையில் பொருத்தமான முடிவெடுக்க அகில இந்திய மையத்திற்கு இந்த மத்திய செயற்குழு அதிகாரம் கொடுத்துள்ளது.

4. விடுதலை போராட்ட தியாகிகளான பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் நினைவு தினமான 23.03.2020 அன்று “CAA, NPR மற்றும் NRC எதிர்ப்பு தின”த்தை கடைபிடிப்பது என இந்த மத்திய செயற்குழு முடிவெடுத்துள்ளது.  அந்த தினத்தில் கருப்பு ரிப்பனுடன் கூடிய கோரிக்கை அட்டை அணிய வேண்டும் என்றும்,  CAA, NPR மற்றும் NRC ஆகியவற்றின் பாதகங்களை விளக்க வேண்டும் என்றும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முன்னுரையை படிக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

5. மதவாத சக்திகள், உழைக்கும் வர்க்கத்தினை பிளவு படுத்த தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருவதை கணக்கில் கொண்டு, மத நல்லிணைக்கத்தை பலப்படுத்தும் வகையில், மாவட்ட மாநில சங்கங்கள், சிறப்புக் கூட்டங்கள், கருத்தரங்கங்கள் உள்ளிட்டவற்றை நடத்த வேண்டும் என்றும் இந்த மத்திய செயற்குழு கேட்டுக் கொள்கிறது. 

6. BSNL ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினமான 22.03.2020 அன்று அனைத்து கிளைகளிலும், நமது சங்க கொடியினை ஏற்றி சிறப்புக் கூட்டங்களையும், இதர நிகழ்ச்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

7. மிகச்சிறந்த சீர்திருத்தவாதியும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை வடிவமைத்தவருமான டாக்டர் B.R.அம்பேத்காரின் நிணைவு தினமான 14.04.2020 அன்று அவருக்கு பொருத்தமான முறையில் அஞ்சலி செலுத்த வேண்டும் என இந்தக் கூட்டம் முடிவெடுத்துள்ளது.  

8. புது டெல்லியில் 03.04.2020 அன்று மத்திய சங்கம் ‘இளம் தோழர்களுக்கன கருத்தரங்கம்’ ஒன்றை நடத்துவதை இந்த மத்திய செயற்குழு பாராட்டியதோடு, மத்திய சங்கம் திட்டமிட்டுள்ள அடிப்படையில் இதற்கான தோழர்களை மாவட்ட சங்கங்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளது.  மேலும் இது போன்ற இளம் தோழர்களுக்கான கருத்தரங்களை மாநில சங்கங்களும் நடத்த வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  

9. அகில இந்திய BSNL உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவை மாற்றியமைப்பது என்கிற அகில இந்திய மையத்தின் முடிவை இந்த மத்திய செயற்குழு, ஏகமனதாக அங்கீகரித்தது. 

10. BSNL ஊழியர் சங்கத்தினையும், அதன் பொதுச்செயலாளரையும் அவமானப்படுத்தும் வகையில் அவதூறான செய்திகளுடன் AUDIO CLIPஐ பரப்பிய ஐந்து நபர்களின் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வது என அகில இந்திய மையம் முடிவெடுத்துள்ளதை இந்த மத்திய செயற்குழு அங்கீகரித்தது. 

11. மத்திய செயற்குழுவின் முடிவுகளை விளக்கிடவும், மாவட்ட, மாநில மட்டங்களில் சங்கத்தை பலப்படுத்தவும், மாநில சங்கங்கள் விரைவில் மாநில செயற்குழுக்களை கூட்ட வேண்டும் என்றும், மத்திய சங்க நிர்வாகிகள் அந்தக் கூட்டங்களில் பங்கேற்ட வேண்டும் என்றும் இந்த மத்திய செயற்குழு முடிவெடுத்துள்ளது.

12. விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்றவர்களின் பகுதி பணத்த்திற்கான நிதியினை கார்ப்பரேட் அலுவலகம் தற்போது வழங்கியுள்ளது.  எனினும், பத்து மாநிலங்களில் இருந்து மட்டும் மத்திய சங்கத்திற்கு சந்தா வந்துள்ளது.  அனைத்து மாநிலங்களில் இருந்தும் மத்திய சங்கத்திற்கான பகுதிப்பணம் வருவதை மாநில செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த மத்திய செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

13. அகில இந்திய மையத்தில் இருந்து தெளிவான வழிகாட்டுதல் கொடுத்த பின்னரும், ஐந்து மத்திய சங்க உறுப்பினர்கள், விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் கொடுத்துள்ளதை இந்த மத்திய செயற்குழு தீவிரமாக விவாதித்தது.  இவர்களில் மூன்று தோழர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளனர்.  இந்த மத்திய செயற்குழு இந்த ஐந்து தோழர்களையும் விடுவித்துள்ளது. அந்த இடங்களுக்கு கீழ்கண்ட தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  
துணை தலைவர்கள்:-
1) தோழர் ஆனந்த் நாராயன் சிங் JTO வதோதரா, குஜராத்
2) தோழர் S.P.சிங் OS(ஓய்வு) நொய்டா. உ.பி. மேற்கு
உதவி பொதுசெயலாளர்:-
தோழர் ஆன்ந்த் குமார் சிங், JE, ஆசாம் கர். உ.பி கிழக்கு
அமைப்பு செயலாளர்கள்:-
1) தோழர் சஞ்சீவ் குமார் TT அமிர்தசரஸ். பஞ்சாப்
2) தோழர் ஜகத்ராம் ஷர்மா JE, ஹமிர்பூர், இமாசலபிரதேசம்.

14) மூன்று மாநில செயலாளர்களும், விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்றுள்ளார்கள் என்பதை இந்த மத்திய செயற்குழு ஆழமாக விவாதித்தது. இந்த மாநிலங்களில் இரண்டு மாதங்களுக்குள், பொருத்தமான முறையில், மாநில மாநாடு/ மாநில செயற்குழுக்களைக் கூட்டி பணியில் உள்ள ஒரு தோழர் மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் இந்த மத்திய செயற்குழு முடிவெடுத்துள்ளது.

தோழமையுடன், 
E . கோபால்,
மாவட்ட செயலர்