Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, March 20, 2020

BSNL CMD யுடன் தலைவர்கள் சந்திப்பு

Image result for meeting


BSNL CMDக்கும் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களுக்கும் இடையே 18.03.2020 அன்று நடைபெற்ற சந்திப்பின் சிறு குறிப்பு

18.03.2020 அன்று அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களுக்கும் BSNL நிர்வாகத்திற்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது. திரு P.K.புர்வார் CMD BSNL, திரு அர்விந்த் வட்னேகர் DIRECTOR(HR) மற்றும் திரு மனீஷ் குமார் GM(Restg) ஆகியோர் நிர்வாகத்தின் சார்பில் கலந்துக்கொண்டனர். BSNL ஊழியர் சங்கத்தின் சார்பில் தலைவர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு ஆகியோர் பங்கேற்றனர். NFTE, SNEA மற்றும் AIBSNLEA சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

CMD BSNL கீழ்கண்ட விஷயங்களை விவரித்தார்:-

BSNLன் செயல்பாடு:-

BSNL நிறுவனம், 2020 ஜனவரியில் 21 லட்சம் புதிய மொபைல் இணைப்புகளையும், பிப்ரவரியில் 18 லட்சம் புதிய மொபைல் இணைப்புகளையும் கொடுத்துள்ளது. சந்தையில் BSNLன் பங்கு சிறு அளவில் அதிகமாகியுள்ளது. ப்ராட் பேண்ட் இணைப்புகளின் துண்டிப்பு பெரிய அளவில் நடைபெற்றுள்ளது. EB பிரிவில் 6 முதல் 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. FTTH பிரிவில் தற்போது 6000 OLTகள் உள்ளன. தொலைவில் உள்ள பகுதிகளில் FTTH வழங்க பாரத் ஏர் ஃபைபர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மேல் பழுதுகளை கண்டு பிடிக்க உறையிடப்பட்ட (ARMOURED) ஆப்டிக் ஃபைபர் கேபிள்களை BSNL வாங்கும்.

விருப்ப ஓய்வு திட்டம்:-

விருப்பம் தெரிவித்த 78,569 ஊழியர் மற்றும் அதிகாரிகளில், 199 பேர் இறந்து விட்டனர். 1767 விண்ணப்பங்களை BSNL நிறுத்தி வைத்துள்ளது. மற்ற விண்ணப்பங்கள் DoTக்கு அனுப்பப்பட்டுள்ளது. VRSக்கு விருப்பம் தெரிவித்திருந்த 76,929 விண்ணப்பதாரர்கள் தற்காலிக் ஓய்வூதியத்தை பெறுகின்றனர். 26,370 பேருக்கு PPO வழங்கப்பட்டு விட்டது. விடுப்பை காசாக்குவதற்கு 5200 கோடி ரூபாய்கள் செலவாகும். விருப்ப ஓய்வு திட்டத்தில் சென்றவர்களுக்கு விடுப்பிற்கான பணமும், கருணை தொகையில் முதல் தவணையும், 2020, மார்ச் 30 அல்லது 31 அன்று வழங்கப்படும்.

BSNLன் 4G சேவை:-

2020-21 நிதி நிலை அறிக்கையில், BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவதற்கான ஒதுக்கீட்டை மத்திய அரசு செய்துள்ளது. அது, 2020 மே மாதத்தில் BSNLக்கு ஒதுக்கப்படக் கூடும். எனினும், 4G சேவையை வழங்குவதற்கான கருவிகள் மார்ச், 2021க்கு பின்னர் தான் தயாராகும் என்பதால் உடனடியாக BSNL 4G அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏற்காது. பயன்படுத்த படாவிட்டாலும், உரிமக் கட்டணமாக ஒரு நாளைக்கு 5.50 கோடி ரூபாயை BSNL வழங்க வேண்டி இருக்கும். எனவே கருவிகள் தயாராவதற்கு முன்பாக 4G அலைக்கற்றையை வாங்குவது உசிதமாக இருக்காது.

BSNL நிறுவனத்திடம் 4G வழங்க தகுதியுள்ள 40,000 3G BTSகள் உள்ளன. இந்த 40,000 BTSகளையும் 4G BTSகளாக மேம்படுத்துவதன் மூலம் உடனடியாக BSNLஆல் 4G சேவையினை வழங்க முடியும். ஆனால் இதில் BSNL சில சிரமங்களை சந்திக்கிறது. இந்த BTSகளின் விற்பனையாளர்களான நோக்கியா, ZTE மற்றும் எரிக்சன் ஆகியவற்றிற்கு BSNL நிறுவனங்களுக்கு BSNL நிறுவனம் 2000 கோடி ரூபாய்களை நிலுவை வைத்துள்ளது. இது தவிர நோக்கியா அது வழங்கியுள்ள 13000BTSகளை மேம்படுத்த, ஒரு BTSக்கு 3.5 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய்கள் வரை கேட்கிறது. ZTE நிறுவனம் அவர்கள் வழங்கியுள்ள 24000 BTSகளை மேம்படுத்த, ஒரு BTSக்கு 7 முதல் 10 லட்ச ரூபாய்கள் வரை கேட்கிறது. இந்த தொகைகள் மிக மிக அதிகமாக உள்ளதால், தற்போதைக்கு இந்த BTS களை மேம்படுத்தும் நிலையில் BSNL இல்லை.

சொத்துக்களை பணமாக்குதல்:-

விற்பனை செய்வதற்கு 14 இடங்களை BSNL அடையாளப்படுத்தி உள்ளது. அதில் 11 இடங்களை தீபம் (DEPARTMENT OF INVESTMENT AND PUBLIC ASSETS MANAGEMENT) ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த 11 இடங்களின் மதிப்பு 18,200 கோடி ரூபாய்களாகும். இந்த சொத்துக்களை விற்பனை செய்ய மூன்று பன்னாட்டு நிறுவனங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. சொத்துக்களை பணமாக்குதல் மிக மிக அவசியம். தற்போது BSNLன் கடன் சுமை 40,000 கோடி ரூபாய்கள். இந்த சொத்துக்கள் உடனடியாக விற்பனை செய்யப்படவில்லை என்றால், BSNL கடன் வலையில் சிக்கிவிடும்.

அரசு உத்தரவாதம்:-

8500 கோடி ரூபாய்கள் அளவிற்கான பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் நிதி திரட்ட தேவையான அரசின் உத்தரவாதம் 2020, ஏப்ரல் மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பத்திரங்களுக்கு 7.5 சதவிகித அளவில் வட்டி இருக்கும்.

BSNL மற்றும் MTNL இணைப்பு:-

BSNL மற்றும் MTNL விரைவில் நடைபெறும். விரைவில் இந்த இணைப்பிற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது.

ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் தெரிவித்த கருத்துக்கள்:-

BSNLன் 4G சேவைகள் துவங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் தொடர்பாக கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. மேலும் கால தாமதமின்றி BSNL, 4G சேவை துவங்கப்பட வேண்டும். OUTSOURCING மூலமாக வலைத்தள பராமரிப்பு மற்றும் பழுதுகள் சரிசெய்வது ஆகியவை திருப்திகரமாக நடைபெறுவதில்லை. லேண்ட் லைன் மற்றும் ப்ராட்பேண்ட் ஆகியவற்றை பராமரிப்பதற்காக BSNL, அறிவித்துள்ள தொகை மிக அதிகம். எனவே அதில் PRIMARY CABLEகளை பாராமரிப்பு பணிகளையும் இணைத்து வழங்க வேண்டும். மூன்று நாட்களுக்கு மேற்பட்ட பழுதுகள், சரிசெய்யப்படாவிட்டாலும், சரி செய்ததாக காட்ட வேண்டும் என தலைமை பொது மேலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்த முறை நிறுத்தப்பட வேண்டும். 

வாடிக்கையாளர் சேவை மையங்களின் செயல்பாடுகள் பரிசீலிக்கப்பட வேண்டும். BSNL மற்றும் MTNL ஆகியவற்றின் இணைப்பில் இறுதி முடிவு எடுக்கும் முன்னர் ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கருத்துக்கள் முறையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவேண்டும். BSNLன் புத்தாக்கம் தொடர்பான அஹமதாபாத் IIMன் அறிக்கை, ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களிடம் விவாதிக்கப்படவே இல்லை. எனினும், இது ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களிடம் விவாதிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது. ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களை கலந்தாலோசிக்காமலேயே, பராமரிப்பு மாநிலங்கள் இணைப்பு, மாநிலங்களுடன் டெலிகாம் ஃபேக்டரிகள் இணைப்பு மற்றும் ப்ராந்திய பயிற்சி கேந்திரங்கள் உருவாக்கப்பட்டது ஆகியவற்றை நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அனைத்து மறு சீரமைப்பு மற்றும் மறு கட்டமைப்பு ஆகியவற்றை ஊழியர் மற்றும் அதிகாரிகள் சங்கங்களோடு விவாதிக்க வேண்டும். ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க தனியான ஒரு விவாதம் தேவை என BSNL ஊழியர் சங்கம் கோரியுள்ளது. அதனை BSNL CMD ஏற்றுக் கொண்டார்.

நேர பற்றாக்குறை காரணமாக மறு சீரமைப்பு மற்றும் மறு கட்டமைப்பு திட்டங்கள் விவாதிக்கப்படவில்லை. இந்த பிரச்சனையை ஓரிரு தினங்களில் விவாதிக்கப்படும் என CMD BSNL உறுதி அளித்துள்ளார்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
தகவல்: மத்திய, மாநில சங்கங்கள்