Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, November 28, 2019

தோழர் CKP பணி நிறைவு பாராட்டு விழா!


வாழப்பாடி கிளை உதவி தலைவரும், KG போஸ் அணி காலம் துவங்கி, நம் சங்கத்தின் முன்னணி ஊழியருமான, தோழர் C . K . பழனிசாமி, வருகிற 30.11.2019 அன்று இலாக்கா பணி நிறைவு செய்கிறார். வாழப்பாடி கிளை தோழர்கள் தோழரின் பணி நிறைவு பாராட்டு விழாவை தோழர் CKP அவர்களின் இல்லத்திலேயே, (வெள்ளாளகுண்டம் கிராமம், வாழப்பாடி தாலுக்கா, சேலம் மாவட்டம் ) ஏற்பாடு செய்திருந்தனர். 

அதன்படி, இன்று, 28.11.2019 மதியம் தோழரின் இல்லத்தில் இந்த இனிமையான விழா சிறப்பாக நடைபெற்றது. ஆத்தூர் கோட்ட பொறியாளர் திரு. ரூபன் விஜய் சிங், நிகழ்விற்கு தலைமை தாங்கினார். வாழப்பாடி உட்கோட்ட அதிகாரி  திரு. E . குருசாமி, நிகழ்விற்கு முன்னிலை வகித்தார். 

BSNLEU தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, மாவட்ட செயலர் தோழர் E . கோபால், ஆகியோர் BSNLEU சார்பாக கலந்து கொண்டு தோழரை கௌரவப்படுத்தினர். 

BSNLEU சேலம் மாவட்ட தலைவர் உள்ளிட்ட மாவட்ட சங்க நிர்வாகிகள், ஆத்தூர் நகர, ஊரக, வாழப்பாடி கிளை செயலர்கள் முன்னணி தோழர்கள், தோழர் CKP அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் என  பலர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். மொத்தத்தில், ஒரு குடும்ப விழாவாக, இந்த பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்