கேள்வி எண்: 1234 பதில் தேதி: 25.11.2019
கேள்வி: இந்த நிதி ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 70 ஆக அதிகரிக்க பரிந்துரை ஏதும் உண்டா?
பதில்: அப்படி ஒரு திட்டம் மத்திய அரசிடம் இல்லை
கேள்வி: 33 வருட சேவை முடித்தவர்களுக்கு பணி ஓய்வு வழங்கும் திட்டம் ஏதும் உண்டா?
பதில்: 33 வருடம் சேவை முடித்தவர்களுக்கு பணி ஓய்வு வழங்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை. ஓய்வு பெறும் வயது 60 என்பது நீடிக்கும்.
தோழர்களே!
அரசு ஊழியர்களுக்கு 33 வருட சேவை அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அப்போது ஓய்வு என்கிற திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிவிக்க போவதாக ஒரு சில விஷமிகள் கடுமையாக வதந்திகளை பரப்பி வந்தனர். இந்த மிரட்டலும், பெரிய எண்ணிக்கையிலான BSNL ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விருப்பம் தெரிவிக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது.
எனினும், மத்திய ராஜாங்க நிதியமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் அவர்கள், 25.11.2019 அன்று பாராளுமன்றத்தில் அரசு ஊழியர்களுக்கு 33 வருட சேவை அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அப்போது ஓய்வு என்கிற திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லையென தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட மத்திய அரசின் சட்டபூர்வமான, பாராளுமன்ற பதில் மூலம் ஒன்று தெளிவாகிறது. அதாவது, ஓய்வு பெறும் வயதை கூட்டவோ, குறைக்கவோ அரசிடம் திட்டம் இல்லை. 33 வருட சேவை முடித்தவர்களை வீட்டிற்கு அனுப்பும் திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்பது தெளிவாகிறது.
"33 வருட" வதந்(தீ)திக்கு முற்று புள்ளி வைப்போம்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
பாராளுமன்ற கேள்வி/பதில் காண சொடுக்கவும் இந்தி / ஆங்கிலம்
குறிப்பு: ஆங்கில கடிதத்தில், தேதி 25.11.2019 என்பதற்கு பதில், 25.11.2018 என தவறாக அச்சாகியுள்ளது. 2018-19 ஆய்வறிக்கை என்பது அதற்கு சாட்சி. அதேபோல், ஆந்திர MP 2019 மே மாதம் நடைபெற்ற பொது தேர்தலில், புதியதாக தேர்வு செய்யப்பட்ட MP ஆவார்.
இந்தி அறிக்கையில் தேதி சரியாக உள்ளது.