ஒப்பந்த ஊழியர்களுக்கு 6 மாத காலமாக சம்பளம் வழங்காமல் காலம் தாழ்த்தும் நிர்வாகத்தை கண்டித்து, 02.07.2019 முதல் மூன்று நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த மாநில சங்கங்கள் அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, 02.07.2019 முதல் நாள் சேலம் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பு போராட்டம் சிறப்பாக நடைபெற்றது. போராட்ட பந்தலில் இரண்டு சங்க மாவட்ட நிர்வாகிகளும் கலந்து ஆலோசித்து, ஒப்பந்த தொழிலாளியின் தற்போதைய பொருளாதார சூழலை கணக்கில் கொண்டு, இரண்டு மற்றும் மூன்றாம் நாள் போராட்டங்களை ஊரக பகுதிகளில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 03.07.2019 அன்று காலை 10 மணி முதல் நாமக்கல் தொலைபேசி நிலையத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இறுதி நாள் போராட்டம் 04.07.2019 அன்று காலை 10 மணி முதல் திருச்செங்கோடு தொலைபேசி நிலையத்தில் நடைபெறும் என்பதை தோழமையோடு தெரிவித்து கொள்கிறோம்.
நாமக்கல்லில் 03.07.2019 அன்று நடைபெறும் போராட்டத்தில் இரண்டு சங்க மாவட்ட நிர்வாகிகள், கிளை செயலர்கள், ராசிபுரம், நாமக்கல், வேலூர், ஆத்தூர் கிளை தோழர்கள் கலந்து கொள்ளவேண்டும்.
04.07.2019 அன்று நடைபெறும் போராட்டத்தில் இரண்டு சங்க மாவட்ட நிர்வாகிகள், கிளை செயலர்கள், திருச்செங்கோடு, சங்ககிரி, பள்ளிபாளையம், எடப்பாடி, மேட்டூர், பகுதி தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும்.
நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கிளைகள் போராட்டத்திற்கான எற்பாடுகளை செய்ய வேண்டும்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் BSNLEU
M . செல்வம்,
மாவட்ட செயலர்,
TNTCWU