02.07.19 முதல் 04.07.19 வரை, காலை 10.00 மணி முதல், PGM அலுவலகம், சேலம்
BSNL லில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. துப்புறவு பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, 6 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. நிறுவனத்தின் நிதி நிலைமையை நிர்வாகம் காரணம் காட்டுகிறது. அரசின் கொள்கைகளால் BSNL என்கிற பொதுத்துறை மட்டுமல்ல, அதில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் குடும்பங்களும் பசியோடும் பட்டினியோடும் பரிதவிக்க வேண்டிய நிலை.
இதனை கண்டித்தும், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை உடனடியாக பட்டுவாடா செய்யப்பட வேண்டும், இனி உரிய தேதியில் ஊதியம் வழங்க வேண்டும், ஆட்குறைப்பு நடவடிக்கையை கை விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாம் நடத்தி வரும் தொடர் போராட்டங்களை மேலும் கூர்மைப்படுத்த, BSNLEU - TNTCWU தமிழ் மாநில சங்கங்கள் அறைகூவல் கொடுத்துள்ளது.
பிரச்சனைக்கு முடிவு எட்டும் வரை போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் விதமாக, முதல் கட்டமாக BSNL ஊழியர் சங்கம் மற்றும் TNTCWU சேலம் மாவட்ட சங்கங்கள் சார்பாக, மாநிலம் தழவிய போராட்டத்தின் ஒரு பகுதியாக, சேலம் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பு, 02.07.19 முதல் 04.07.19 வரை தினமும் காலை 10.00 மணி முதல் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும்.
போராட்டமே நமது ஆயுதம்!.
வெற்றியே நமது இலக்கு!.
போராட்டங்களை வலுவாக நடத்திடுவோம்!.
ஊதியத்தை பெற்றிடுவோம்!!.
அலைகடலென திரள்வீர்!!!
தோழமையுடன்,
E கோபால்,
மாவட்ட செயலர், BSNLEU
M. செல்வம்,
மாவட்ட செயலர், TNTCWU