11.06.2019 அன்று சேலம் மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம், செவ்வை தொலைபேசி நிலைய கூட்ட அரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர் M . விஜயன், தலைமை தாங்கினார்.
முதல் நிகழ்வாக, காலை 10.30 மணிக்கு சங்க கொடி ஏற்றப்பட்டது. தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி சங்க கொடியை விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றினார்.
மாவட்ட உதவி பொருளர் தோழர் R . கோவிந்தராஜ், அஞ்சலியுறை நிகழ்த்த, மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், அனைவரையும் வரவேற்றார். ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார்.
ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி, தோழர் E . கோபால், மாவட்ட செயலர் சிறப்புரை வழங்கினார். BSNLEU தர்மபுரி மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணன், TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் P . செல்வம், வாழ்த்துரை வழங்கினார்கள். கடந்த செயற்குழுவிற்கு பின், கடந்த 3 மாதங்களில் ஓய்வு பெற்ற தோழர்கள் கௌரவப்படுத்தபட்டனர்.
பின்னர் விவாதம் துவங்கியது. விவாதத்தில் 34 செயற்குழு தோழர்கள் பங்குபெற்றனர். விவாதத்திற்கு பதில் அளித்து தோழர் E . கோபால் விளக்கவுரை வழங்கினார்.
8வது சரிபார்ப்பு தேர்தலில் முதன்மை சங்கமாக நாம் சேலம் மாவட்டத்தில் வெற்றி பெற, உடனடியாக கள பணி துவங்குவது, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, கிளை கூட்டங்கள் அனைத்து கிளைகளிலும் நடத்துவது, மாநாடுகள் நடத்தி முடிக்க வேண்டிய கிளைகள் 15.07.2019க்குள் நடத்தி முடிப்பது, மாவட்ட மாநாட்டை 2019 ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் நடத்துவது, ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பிரச்சனைக்காக, 18.06.2019 அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில் மாலை நேர தர்ணா போராட்டம் நடத்துவது, உள்ளிட்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது. மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், நன்றி கூற, மாலை 6 மணி அளவில் கூட்டம் நிறைவு பெற்றது.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்