ஒப்பந்த ஊழியர் சம்பளப் பிரச்சினை தீராத பிரச்சனையாக, கடந்த ஒரு வருடமாக நீடித்து வருகிறது. பல மாவட்டங்களில், 4 முதல் 5 மாதம் ஊதியம் நிலுவையில் உள்ளது. நமது சேலம் மாவட்டத்தில், கேபிள் பகுதி 2மாதம், INFRA பகுதி தோழர்களுக்கு1மாதம், HOUSE KEEPING தோழர்களுக்கு 5 மாதம் ஊதியம் நிலுவையில் உள்ளது.
இது போக, ஒப்பந்த ஊழியர்களை குறைக்க வேண்டும் என BSNL கார்ப்பரேட் அலுவலகம் அனைத்தது மாநில தலைமை பொது மேலாளர்களுக்கும் 04.06.2019 அன்று கடிதம் வேறு அனுப்பியுள்ளது.
ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது BSNL நிறுவனத்தின் சேவை மிக கடுமையாக பாதிக்கும். எனவே ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க கூடாது என CMD மற்றும் இயக்குனர்களுக்கும் BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
11.6.19 அன்று சேலம் செவ்வையில் நடைபெற்ற BSNLEU மாவட்ட செயற்குழுவில், ஒப்பந்த ஊழியர் சம்பள தாமதத்தை கன்டித்து, 18.6.19 அன்று, மாலை நேர தர்ணா போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், BSNLEU - TNTCWU இரு சங்கங்கள் சார்பாக, சேலம் MAIN தொலைபேசி நிலையத்தில், 18.6.19 செவ்வாய்கிழமை, மதியம் 3 மணி முதல் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெறும்.
இரு சங்க தோழர்களும் அலைகடலென திரண்டு வரும்படி, தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்..
போராட்ட வாழ்த்துக்களுடன்,
E.கோபால், D/S., BSNLEU
M. செல்வம், D/S., TNTCWU