Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, April 26, 2019

மத்திய சங்க செய்திகள்

Image result for bsnleu chq


8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலை தள்ளிவைக்க நடைபெறும் ஏற்பாடுகளை எதிர்த்து, BSNLEU - NFTEBSNL சங்கங்கள் கூட்டாக நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. 

26.04.2019 அன்று BSNLEU -NFTEBSNL சங்கங்கள் கூட்டாக நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், 8வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் நடவடிக்கைகளை உடனடியாக துவங்க கோரிக்கை வைத்துள்ளனர். நிதி நிலை, மற்றும் பொது தேர்தலை காரணம் காட்டி, சுமார் ஆறு மாத காலத்திற்கு தேர்தலை தள்ளி வைக்க நிர்வாகம் திட்டம் தீட்டியதை உணர்ந்த அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், இந்த கோரிக்கையை தற்போது எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

=======================================================================

ஊதிய மாற்ற பேச்சு வார்த்தை மீண்டும் துவங்கிட வேண்டும்

ஊழியர்களுக்கான ஊதிய மாற்றத்திற்கான பேச்சு வார்த்தைகள் மீண்டும் துவக்கப்பட வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துக் கொண்டுள்ளது. 08.04.2019 அன்று மனிதவள இயக்குனருடன் நடைபெற்ற முறையான சந்திப்பின் போது இந்த பிரச்சனை மீண்டும் எழுப்பப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையை மீண்டும் துவக்க BSNL நிர்வாகம் விரும்புகிறது என்று DoTக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என GM(SR)க்கு மனித வள இயக்குனர் உத்தரவிட்டிருந்தார்.  இது தொடர்பாக 25.04.2019 அன்று GM(SR) திரு A.M. குப்தா அவர்களை தோழர் P.அபிமன்யு அவர்கள் சந்தித்து விசாரித்தார். கார்ப்பரேட் அலுவலகத்தின் SR பிரிவு இதுவரை DoTக்கு கடிதம் எழுத வில்லை என தெரிய வந்தது. இந்த பணியினை விரைவில் செய்து முடித்து ஊதிய பேச்சு வார்த்தையை விரைவில் நடத்த வேண்டும் என BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் GM(SR) அவர்களை வற்புறுத்தி உள்ளார்.

=======================================================================

வங்கிக் கடன்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் புதுப்பிப்பு

கனரா வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றோடு ஊழியர்களுக்கு கடன் வழங்க போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காலாவதியாகி போனதை தொடர்ந்து அவற்றை புதுப்பிக்க வேண்டும் என BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துக் கொண்டுள்ளது. 25.04.2019 அன்றும் இந்த விஷயத்தை கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள DGM(Banking) அவர்களிடம் விவாதிக்கப்பட்டது. கார்ப்பரேட் அலுவலகம் அந்த பணியில் வேகமாக இறங்கியுள்ளதாகவும், ஒரு வார காலத்திற்குள் புதுப்பிக்கப்படலாம் என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

=======================================================================

BSNL ஏன் இன்னமும் 4G சேவை வழங்கவில்லை- சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

BSNL நிறுவனம் இன்னமும் ஏன் 4G சேவை வழங்கவில்லை என தொலை தொடர்பு துறைக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை அமர்வு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வெங்கடேஷ் என்பவர் இதற்கு மனு தாக்கல் செய்துள்ளார். அனைத்து தனியார் நிறுவனங்களும் 4G சேவையை துவங்கி விட்ட பின்னரும் BSNLக்கு ஏன் இன்னமும் இந்த சேவை வழங்கப்படவில்லை. BSNL இன்னமும் 4G சேவை தராமல் காலம் தாழ்த்துவதால், தனியார் நிறுவனங்கள் ஆதாயம் பெறுகிறார்கள் என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார். எனவே உயர் நீதிமன்றம் BSNL நிறுவனம் விரைவில் 4G சேவையை துவங்கிட அரசிற்கும், BSNL நிறுவனத்திற்கும் உத்தரவிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மனுதாரரின் முயற்சிக்கு BSNL ஊழியர் சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

தோழமையுடன்,
E.கோபால்,
மாவட்ட செயலர்