Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Thursday, April 25, 2019

ஒப்பந்த ஊழியர்களுக்காக கண்டன ஆர்ப்பாட்டம்

Image result for ஆர்ப்பாட்டம்

27.04.2019, காலை 10 மணி அளவில், PGM அலுவலகம், சேலம்-7 

மாநிலம் முழுவதும் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளப் பிரச்னை, பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ளது. பல மாவட்டங்களில் 4 மாதச் சம்பளம் நிலுவையில் உள்ளது,  சம்பளம் வழங்கிட பல்வேறு மட்டங்களில் பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு ஏற்படததால் மறுபடியும் போராட்டத்தில் ஈடுபடுவதென மாநில சங்கங்கள் முடிவு எடுத்துள்ளது. அதன்படி 27.04.2019 சனிக்கிழமை அன்று, மாலை நேர தர்ணாவும்,  06.05. 2019 முதல் மூன்று தினங்கள் சென்னை மாநில அலுவலகத்தில் மாநிலச் சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளும் உண்ணாவிரதப் போராட்டமும் நடத்த வேண்டும் என BSNLEU, TNTCWU மாநில சங்கங்கள் அறைகூவல் கொடுத்துள்ளது.

நம்முடைய மாவட்ட சூழலை கணக்கில் கொண்டு, கீழ்கண்ட 
கோரிக்கைகளையும் அதோடு இணைத்து, 27.04.2019 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நமது மாவட்ட கோரிக்கைகளான, 

1.INFRA ஒப்பந்த தோழர்களின் திறனுக்கேற்ற ஊதியம் நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், மாதங்களில் unskilled கூலியாக
வழங்கபட்டுள்ளது. SEMI-SKILLED நிலுவை தர வலியுறுத்தியும்...

2.House keeping பிரிவில் புதுக்கோட்டை ராஜா, நேஷனல் 3 மாதம் ஊதியம் மற்றும் ஆறு மாத போனஸ் நிலுவை வழங்க வலியுறுத்தியும்...

3. STR மற்றும் சிவில் ஊதியம், திறனுக்கேற்ற கூலி மாற்றத்தை வலியுறுத்தியும்...

4. ஒப்பந்ததாரர் ராஜா மற்றும் கோபால் கேபிள் பகுதியில்  பனியற்றும் தோழர்களுக்கு, மார்ச்  மாதம் ஊதியம் வழங்க வழியுறுத்தியும்...

5.மல்லி ஒப்பந்ததாரர் VDA (9 மாதம்) நிலுவை வழங்க வேண்டும் 

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், 27.04.2019 சனிக்கிழமை, காலை 10.00 மணி அளவில், சேலம் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ளது.

அனைவரும்  திரளாக பங்கேற்ப்போம்! உரிமைகளை வென்றெடுப்போம்!!

போராடமால் பெற்றதில்லை! 
போராடி தோற்றதில்லை!!..

போராட்ட வாழ்த்துக்களுடன்,

E.கோபால், DS., BSNLEU.,
M.செல்வம், DS., TNTCWU.,
சேலம் மாவட்டம்