Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Wednesday, January 9, 2019

BSNLEU சங்கத்தின் தொடர் முயற்சியின் அடுத்த வெற்றி!

Image result for bsnleu

தவறாக வழங்கப்பட்ட உயர் ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது - சாதக உத்தரவு அமுலாக்கம் 


நமது சேலம் மாவட்டத்தில், கடந்த 1998-2002 கால கட்டத்தில், கேடர் சீரமைப்பு திட்டத்தில் TM பதவி உயர்வு வழங்க போதிய பதவிகள் இல்லாத காரணத்தால், Officiating உள்ளிட்ட தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. TM கேடரில் பணி புரிந்த தோழர்கள், நிரந்தர பதவி பெற சில கால தாமதம் ஏற்பட்டது. ஆனாலும், TM கேடர் சம்பளம் வழங்கப்பட்டது. 

சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு, தணிக்கை துறை ஆட்சேபணைகளை காரணம் காட்டி, 200க்கும் மேற்பட்ட  தோழர்களுக்கு "பிடித்தம் உத்தரவை" நிர்வாகம் பிறப்பித்தது. பல தோழர்களுக்கு ஆயிர கணக்கான ரூபாய்களை, சில தோழர்களுக்கு லட்ச ரூபாய்க்கு மேல் RECOVERY என நிர்வாகம் அதிர்ச்சி தந்தது. 

இது சம்மந்தமாக உச்ச நீதி மன்றம் வழங்கியுள்ள உத்தரவுகளை மேற்கோள்காட்டி, நமது மத்திய சங்கம் மூலம் பிரச்னையை அணுகினோம். BSNLEU மத்திய சங்கம் கார்ப்பரேட் அலுவலகத்தை அனுகி, உரிய உத்தரவை பெற்றபோதும், மாநிலத்தில் அமுலாகாத நிலை நீடித்ததை தொடர்ந்து, மாநில கவுன்சிலில், நமது மாவட்டம் சார்பாக பிரச்னையை கொடுத்தோம். 

09.10.2018 மாநில கவுன்சில் கூட்டத்தில், முடிவு எடுக்கப்பட்டு, 27.11.2018 அன்று மாநில நிர்வாகம் ரூ.1,82,78,786.00 (ரூபாய் ஒரு கோடி எண்பத்திரண்டு லட்சம், எழுபத்தி எட்டாயிரம், ஏழுநூற்று எண்பத்தாறு ரூபாய்) ஊழியர்களுக்கு பிடிக்க வேண்டாம் என உத்தரவு வெளியிட்டது. 

நமது மாவட்டத்தில், அதை அமுலாக்க மாவட்ட நிர்வாகத்தை, சேலம் மாவட்ட BSNLEU சங்கம் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில், 04.01.2019 அன்று சாதக உத்தரவு வெளியிடபட்டது. தற்போது, பணியில் உள்ள 178 தோழர்கள் இதன் மூலம் பயன் பெறுவர். 

இது போக, பணி நிறைவு செய்த தோழர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையும் விரைந்து பட்டுவாடா செய்யப்படும். BSNLEU மத்திய, மாநில சங்கங்களுக்கு நமது நெஞ்சு நிறை நன்றி. 

வாழ்த்துக்களுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர் 
பலன் பெறும் ஊழியர்கள் பட்டியல் காண இங்கே சொடுக்கவும்
மாவட்ட நிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்
மாநில நிர்வாக உத்தரவு காண இங்கே சொடுக்கவும்