கொதிக்கும் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையை கண்டித்து 10 மத்திய தொழிற் சங்கங்கள் நவ., 9 முதல் 11 ஆம் தேதி வரை தில்லி ராம்லீலா மைதானத்தில் தொடர் தர்ணா போராட்டம் நடத்த உள்ளன. சிஐடியு மாநில பொதுச் செய லாளர் ஜி.சுகுமாறன் ஈரோட்டில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது :
மத்திய அரசு 3 ஆண்டுகளில் பெரியபொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த வில்லை. ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தும் வெறும் 17 லட்சம்பேருக்கு மட்டுமே வேலை வழங்கப் பட்டுள்ளது. அதிலும், 2.75 லட்சம் பேருக்கு மட்டுமே இரும்பு, மின்சாரம், தகவல் தொழில் நுட்பத் துறைகளில் வேலை கிடைத்துள்ளது. பெருமளவில் வேலை இல்லாத திண்டாட்டம் நாடு முழுவதும் அதி கரித்துள்ளது. பணமதிப்பு நீக்கத்தால், ஏற்கெனவே வேலையில் இருந்தவர்கள் வேலை இழந்துள்ளனர்.
விவசாயிகளின் விலை பொருளுக்கு, ஒன்றரை மடங்கு விலை நிர்ணயிக்கப்படும்; 2 மடங்கு அவர்களது வருவாய் அதிகரிக்கும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால், நாடு முழுவதும், விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்ற னர். ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.இது போன்ற காரணங் களால் அனைத்துப் பொருள் களின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்கள், தொழில் நிறு வனங்களுக்கு சாதகமாகவே திருத்தப்படுகின்றன. மத்திய அரசு 7 ஆவது ஊதியக்குழுவில் குறைந்தபட்சஊதியம் ரூ.18 ஆயிரம் என நிர்ண யித்தும், மத்திய அரசின் கீழ் உள்ள பல துறைகளில், ரூ.10ஆயிரம் என நிர்ண யித்துள்ளது. மானியங்கள் படிப்படியாக குறைக்கப்படுகின்றன.
பொது விநியோகத் திட்ட மானியமும் வங்கியில் செலுத்தப்படும் என விரைவில் அறிவிப்பு வர உள்ளது. எனவே, சாமானிய மக்களுக்கு எதிரான இத்தகைய மத்திய அரசின் நடவடிக்கைகள் மற்றும் தவறான பொரு ளாதாரக் கொள்கையை கண்டித்து 10 மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், நவம்பர்9 முதல், 11 ஆம் தேதி வரை தில்லி ராம்லீலா மைதானத்தில் தொடர் தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்ட இறுதியில், தொடர் வேலை நிறுத்தம் தொழிற்சாலைகளில் நடத்துவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.இந்த மாபெரும் போராட்டத்தில் 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள். பாஜகசார்பிலான தொழிற்சங்கம் தவிர 10 மத்திய தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்கும். இவ்வாறு அவர் கூறினார்.