தணிக்கை குழுவின் எதிர்மறை பரிந்துரையை காரணம் காட்டி, நமது மாவட்டத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மிதிவண்டி பராமரிப்பு படி, CMA (Cycle Maintenance Allowances) திடீரென நிறுத்தப்பட்டது.
உடனடியாக, மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்து நாம் பேசினோம். பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியபிறகு, தல மட்ட அதிகாரிகள் சான்றிதழ் வழங்கினால், மீண்டும் படிகள் பட்டுவாடா செய்யப்படும் என ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி, முதல் தவணையாக சான்றிதழ் பெறப்பட்ட 162 ஊழியர்களுக்கு CMA பட்டுவாடா உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ஊழியர்களின் சான்றிதழ் கிடைக்கப்பெற்றவுடன், பட்டுவாடா மேற்கொள்ளப்படும்.
கிளை செயலர்கள் இந்த பட்டியலை சரிபார்த்து, விடுபட்ட தோழர்களுக்கு படிகள் பெற, உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது. நமது கோரிக்கையை ஏற்று, உத்தரவு வெளியிட்ட மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
உத்தரவு காண இங்கே சொடுக்கவும்