Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, April 25, 2017

ஒப்பந்த ஊழியர்களுக்கு பஞ்சப்படி VDA உயர்வு

Image result


ஒப்பந்த ஊழியர்களுக்கான பஞ்சப்படி (VDA விலைவாசிப்படி) 01/04/2017 முதல் உயர்ந்துள்ளது. இதற்கான உத்திரவு 20/04/2017 அன்று CLC, முதன்மை தொழிலாளர் ஆணையரால், வெளியிடப்பட்டுள்ளது.

FOR UNSKILLED LABOUR

A பிரிவு நகரத்தில் நாளொன்றுக்கு ரூ.13/=ம்
B பிரிவு நகரத்தில் நாளொன்றுக்கு ரூ.11/=ம்
C பிரிவு நகரத்தில் நாளொன்றுக்கு ரூ.9/=ம்
விலைவாசிப்படி 01/04/2017 முதல் உயர்ந்துள்ளது.

தற்போதைய சம்பளம்

நகரம்
அடிப்படைச்சம்பளம் ரூ.437
விலைவாசிப்படி    - ரூ.11
மொத்தச்சம்பளம்   - ரூ.448

ஊரக பகுதிகளில் 
அடிப்படைச்சம்பளம் ரூ.350
விலைவாசிப்படி    - ரூ.9
மொத்தச்சம்பளம்   - ரூ.359

தற்போதைய விதிகளின்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டுமே விலைவாசிப்படி வழங்கப்படும். புதிய சம்பளம் 19/01/2017ல் இருந்து நடைமுறைக்கு வந்தாலும் அவர்களுக்கு அன்றைய தேதியில் விலைவாசிப்படி உயர்வு இல்லை. எனவே 19/01/2017 முதல்  31/03/2017 வரை அடிப்படைச்சம்பளம் மட்டுமே பொருந்தும். 01/04/2017ல் இருந்ததுதான் விலைவாசிப்படி அமுலுக்கு வரும். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
CLC உத்தரவு காண இங்கே சொடுக்கவும்