ஆத்தூர் நகர, ஊரக மற்றும் வாழப்பாடி கிளைகள் இணைந்த 8வது மாநாடு, ஆத்தூரில் 24.10.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் K . வரதராஜன், B . பெரியசாமி, C . K . பழனிசாமி, கிளை தலைவர்கள் கூட்டு தலைமை தாங்கினர் .
முதல் நிகழ்வாக, தோழர் R . கண்ணையன், JE, கிளை உதவி தலைவர், தேசிய கொடி ஏற்ற, மூத்த தோழர் A . ராமலிங்கம், கிளை உதவி செயலர் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே சங்க கொடி ஏற்றி வைத்தார். கிளை உதவி தலைவர் தோழர் P . குமாரசாமி அஞ்சலியுறை வழங்கினார். தோழர் G. R . வேல்விஜய், ஊரக கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார்.
தோழர் S . ஹரிஹரன், மாவட்ட உதவி செயலர் முறைப்படி மாநாட்டை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் M . பன்னீர்செல்வம், V . சின்னசாமி, வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாவட்ட செயலர் தோழர் E . கோபால், தமிழ் மாநில உதவி செயலர் தோழர் S . தமிழ்மணி ஆகியோர் மாநாட்டு சிறப்புரை வழங்கினார். மத்திய அரசின் கொள்கைகள், பொதுத்துறை நிறுவனங்களின் நிலை, BSNL நிதி நிலைமை, ஊழியர் நலன் சார்ந்த கோரிக்கைகளை அவர்கள் விளக்கி சிறப்புரை வழங்கியது மாநாட்டின் சிறப்பாக இருந்தது.
ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், ஆத்தூர் நகர கிளைக்கு தோழர் P . குமாரசாமி, T . செல்வராஜ், A . ராஜேந்திரன், தலைவர், செயலர், பொருளாராகவும் ஆத்தூர் ஊரக கிளைக்கு தோழர்கள் B . பெரியசாமி, G.R . வேல்விஜய், S .K . சுப்பிரமணியம், தலைவர், செயலர், பொருளாராகவும், வாழப்பாடி கிளைக்கு தோழர்கள் C .K .பழனிசாமி, S . யாதிஸ்ராஜ், M . சேகர் தலைவர், செயலர், பொருளாராகவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏற்கப்பட்டது. தோழர் P . சங்கர் நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்