Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, October 26, 2016

திருச்செங்கோடு நகர மற்றும் ஊரக கிளைகள் இணைந்த மாநாடு



திருச்செங்கோடு  நகர மற்றும் ஊரக கிளைகள் இணைந்த மாநாடு, திருச்செங்கோட்டில் 25.10.2016 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் V. நாராயணன் மற்றும் S . ரங்கசாமி, கிளை தலைவர்கள் கூட்டு தலைமை தாங்கினர் .

முதல் நிகழ்வாக, தோழர் S. தங்கராஜ், விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, சங்க கொடி ஏற்றி வைத்தார். ஊரக கிளை தோழர் K. செல்வராஜ், அஞ்சலியுறை வழங்கினார். 
தோழர் K . ராஜன்,  ஊரக கிளை செயலர் அனைவரையும் வரவேற்றார். 

சேவை சம்மந்தமான கருத்துக்களை திரு. K . பாலசுப்ரமணியம், கோட்ட பொறியாளர் வழங்கி, மாநாட்டை வாழ்த்தினார். 

தோழர் S . தமிழ்மணி, மாநில உதவி செயலர் முறைப்படி மாநாட்டை துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். 

மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் M . சண்முகம், P . தங்கராஜ், கிளை செயலர்கள் தோழர்கள் நாராயணன் (எடப்பாடி), பரந்தாமன் (பள்ளிப்பாளையம்), ரமேஷ் (வேலூர்), சின்னசாமி (நாமக்கல் ஊரகம்), கணேசன் (சங்ககிரி), தல மட்ட கவுன்சில் உறுப்பினர் தோழர் ரவிமணி, ராசிபுரம் கிளை தலைவர் தோழர் P .M .ராஜேந்திரன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாவட்ட செயலர் தோழர் E . கோபால், மாநாட்டு சிறப்புரை வழங்கினார். 

ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. 

பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், திருச்செங்கோடு நகர கிளைக்கு தோழர்கள் V . நாராயணன், M . ராஜலிங்கம், 
S .தங்கராஜ் தலைவர், செயலர், பொருளராகவும், திருச்செங்கோடு ஊரக கிளைக்கு தோழர்கள் S . ரங்கசாமி, K . ராஜன், 
K. செல்வராஜூ, தலைவர், செயலர், பொருளராகவும், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏற்கப்பட்டது. தோழியர் 
K .M .புவனேஸ்வரி, JE நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார். 
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்