கடந்த 19.08.2016 அன்று நமது மேற்கு வங்க BSNLEU மாநில சங்க அலுவலகத்தின் மீது, திர்ணாமூல் கூலி ஆட்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். அலுவலகத்தில் இருந்த நாற்காலிகள், மின் விசிறிகள், விளக்குகளை சேதப்படுத்தினர். அலுவலக மேஜை உள்ளிட்ட பொருட்களை வெளியில் தூக்கி எறிந்தனர். நமது பூட்டை உடைத்து திர்ணாமூல் குண்டர்கள் அவர்களின் பூட்டை பூட்டி சென்றனர்.
நமது மாநில சங்க அலுவலகம், CTO வளாகத்தில் இருக்கிறது. இருப்பினும், திர்ணாமூல் கூலி ஆட்கள் துணிந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். உடனடியாக, நமது மேற்கு வங்காள மாநில சங்கம், மாநில தலைமை மேலாளரிடம் புகார் தெரிவித்தும், இன்று வரை நடவடிக்கை எதுவும் இல்லை. குறைந்தபட்சம், FIR கூட பதியப்படவில்லை என்பது வேதனையான ஒன்று. நமது மத்திய சங்கம் CMD அவர்களிடம் முறையீடு செய்துள்ளது.
திர்ணாமூல் குண்டர்களின் தாக்குதலை கண்டித்து 24.08.2016, புதன்கிழமை அன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த நமது மத்திய சங்கம் அறைகூவல் கொடுத்துள்ளது. அதன்படி, நமது மாவட்ட சங்கம் சார்பாக நாளை, 24.08.2016, அன்று சேலம் MAIN தொலைபேசி நிலையம் முன்பு கண்டன முழக்கம் செய்யப்படும். ஜனநாயக உரிமைகளை நிலை நாட்ட ஆர்ப்பரித்து வாரீர் என தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்
தாக்குதலில் சேதம் அடைந்த நமது சங்க அலுவலக படங்கள் காண இங்கே சொடுக்கவும்
CMD அவர்களுக்கு நமது மத்திய சங்கம் கொடுத்துள்ள புகார் கடிதம் காண இங்கே சொடுக்கவும்