Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, March 22, 2016

(சு)வாசித்த கடைசி புத்தகம்




1931, மார்ச்-23 மாலை நேரம்வானம் குமுறியது...வலிய காற்று லாகூர் எங்கும் வீசியது...மாணவர்கள், இளைஞர்கள், மாபெரும் தலைவர்கள்தேசமெங்கும் பேரணி, ஆர்ப்பாட்டம்…-அதுதில்லியிலும் லாகூரிலும் ஓங்காரமாய் ஒலித்தது... “ இன்குலாப் ஜிந்தாபாத்! இன்குலாப் ஜிந்தாபாத்! பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே, பாரதத்தின் மாவீரர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரைத் தூக்கிலிடாதே!...” - புரட்சி முழக்கம் இடியோசையாய் முழங்கியது...அரண்டுபோய் நின்றனர் ஆங்கிலேய அதிகாரிகள். ‘பகத்சிங் பாராளுமன்றத்தில் புகைக்குண்டு வீசினான்,சகத் தோழர்களோடு கலகங்கள் விளைவித்தான்,ஆட்சிக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டினான்...ஆதலால் பலருக்கு ஆயுள் தண்டனை,பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் மூவருக்கும் தூக்குத் தண்டனை’என்று அறிவித்தது நீதிமன்றத் தீர்ப்புஅன்றுமுதல் தேசமெங்கும் ஆர்ப்பரிப்பு. 1931, மார்ச்-24அதிகாலை மூவரும் தூக்கிலிடப்பட வேண்டும் எனஅதிகாரிகள் தண்டனையை உறுதி செய்தனர்.

மார்ச்-23, மாலை-5 மணிலாகூர் மத்தியச் சிறைச் சாலை...லாவகமாய்
ஜீப்புகள் விரைந்து வந்தன...திடு திடுமென பெரிய அதிகாரிகள் இறங்கினர்...திடுக்கிட்டு ஓடிவந்தான் சிறையதிகாரி...“தேசம் கொதித்துக் கொண்டிருக்கிறது,டில்லி, லாகூரெங்கும் கலகம் நடக்கிறது,என்ன நடக்கும் ஏது நடக்கும் எனச் சொல்ல முடியாது...எனவேதான்...எனவேதான்...இன்று முன்னிரவு-7-30 மணிக்குஅந்த மூவருக்கும் தூக்குத் தண்டனையை இந்தச் சிறைக்குள் நலியாமல் நிறைவேற்று!உடனே, இப்போதே காரியத்தில் இறங்கு!” “உத்தரவு!” என்று ஜெயிலர் ஓங்கி யடித்தான் சல்யூட்!மார்ச்-23, இரவு-7 மணிபூட்டப்பட்டிருந்த சிறையறையில்மங்கிய வெளிச்சத்தில்புத்தகம் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான்- அந்த இருபத்து மூன்று வயது இளைஞன் பகத்சிங்.அது லெனின் எழுதிய புரட்சி நூல். “அரசும் புரட்சியும்” என்னும் அற்புத நூல்... “ நாளை விடியலில் தூக்குத் தண்டனை...நூலை அதற்குள் (சு)வாசித்திட வேண்டும்...என்பது பகத்சிங்கின் கடைசி ஆசை... காவலர் புடை சூழ ஜெயிலர் வந்தான்... காட்டினான் பகத்சிங்குக்கு -அந்த கோழைத் தனமான மரண ஆணையை.



மாவீரன் பகத்சிங்கை நெருங்கிட மரணமும் அஞ்சி நடுங்கியது... “சிறிது நேரம் பொறுத்திருங்கள், புரட்சியாளர் ஒருவரோடு- இந்தப் புரட்சியாளன் பேசிக் கொண்டிருக்கிறான்...படித்து முடித்துவிடுகிறேன். இப் புத்தகத்தை அடுத்து வருகிறேன் தூக்கு மேடைக்கு...”வாசித்து முடித்த புத்தகத்தை அங்கேயே வைத்துவிட்டுதேசத்தின் மாவீரன் சலனமற்று நடந்தான்... பகத்சிங்கோடு-ராஜகுருவும் சுகதேவும் ராஜநடை போட்டனர் தூக்கு மேடைக்கு.மார்ச்-23, இரவு-7.30 மணிகாலங் காலமாய்-களங்கத்தைச் சுமந்து நிற்கும் தூக்கு மேடை...கண்கள் மறைக்கப்பட்ட கறுப்புத் துணியைக்கழற்றி எறிந்தான் கனலென பகத்சிங்... “சாவுக்கு அஞ்சும் கோழைகள் அல்ல நாங்கள்!தாய் மண்ணை நான் பார்த்துக்கொண்டே சாகவேண்டும்!இந்தத் தூக்குக் கயிற்றோடு பகத்சிங் அழிந்துவிட மாட்டான்!இலட்சக் கணக்கான பகத்சிங்குகள் கிளர்ந்தெழுவார்கள்...என் தேசம் ஒரு நாள் விடுதலை பெறும்!இன்குலாப் ஜிந்தாபாத்! இன்குலாப் ஜிந்தா..பா..த்..!” இரவு -7.33 மணிஅந்த மாவீரன் இருந்த அந்தச் சிறை அறையில் -அவன் வாசித்து முடித்த அந்தப் புரட்சிப் புத்தகம்-காற்றில் படபடத்துக் கண்ணீர் வடித்தது...அதன் ஏடொன்று மவுனமாய்க் கூறியது-“தியாகிகள் புதைக்கப் படுவதில்லை-அவர்கள் விதைக்கப்படுகிறார்கள்.


Image result for theekkathir