நமது மத்திய சங்கத்தின் தொடர் முயற்சியால்,
14-10-2015 அன்று JTO ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய JTO ஆளெடுப்பு விதி வெளியிடப்பட்டுள்ளது.
18.09.2015 அன்று நடைபெற்ற BSNL வாரிய கூட்டத்தில் ( BSNL Board Meeting ) JTO ஆளெடுப்பு விதியில் (Recruitment Rules ) நாம் கோரியிருந்த திருத்தங்கள் ஏற்று கொள்ளப்பட்டன.
இலாகா போட்டி தேர்வு மூலம் JTO பதவி உயர்வு பெற வேண்டும் என்றால், 10 ஆண்டுகள் சேவை முடித்திருக்க வேண்டும் என்ற விதியை கடுமையாக போராடி 7 ஆண்டுகளாக முன்பே குறைத்தோம்.
இருப்பினும் , நமது நீண்ட நாள் கோரிக்கையான, "5 ஆண்டுகள் சேவை தகுதி" என்பதை அடைய பல கட்ட இயக்கங்கள் நடத்தினோம்.
சென்ற 08.09.2015 அன்று கூட, ஓர் ஆண்டுக்கு மேலாக கிடப்பில் உள்ள இந்த கோரிக்கையை விரைவில் தீர்க்க வேண்டும் என மனிதவள இயக்குனரை சந்தித்து, கடுமையாக நமது மத்திய சங்கம் வாதிட்டது.
அதன் பலனாக, 18.09.2015 அன்று நடைபெற்ற BSNL வாரிய கூட்டத்தில் நமது கோரிக்கை ஏற்கப்பட்டு, 7 ஆண்டுகள் சேவை தகுதி என்பது 5 ஆண்டுகளாக குறைக்கபட்டது.
அதே போல், நீண்ட நாட்களாக தற்காலிக JTO பதவி வகிக்கும் நமது மூத்த TTA தோழர்களுக்கும் (Officiating JTOs ) நிரந்தர JTO பதவி பெற ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
இந்த தொடர் முயற்சியின் பலனாக, நேற்று, 14.10.2015 புதிய விதிகள் வெளியிடப்பட்டது.
அதன் படி,
1. புதிய விதிகள் Junior Telecom Officer (Telecom ) Recruitment Rules 2014 என அழைக்கப்படும்.
2. 14.10.2015 முதல் அமுல் படுத்தப்படும்.
3. IDA சம்பள விகிதமான 16400-40500 வழங்கப்படும்.
4. இலாக்கா ஊழியர்கள் வயது 55க்கு கீழ் இருக்க வேண்டும்.
5. 13600-25420 என்ற சம்பள விகிதத்தில் ஐந்து
ஆண்டுகள் சேவை முடித்திருக்க வேண்டும்.
6. கல்வித்தகுதி - BE தேர்ச்சி அல்லது 3 ஆண்டு DIPLOMA தேர்ச்சி அல்லது
BSc., ELECTRONICS அல்லது BSc., Computer Science
அல்லது BSc. பட்டப்படிப்பில்
PHYSICS அல்லது MATHEMATICS படித்திருக்க வேண்டும்.
7. JTO Screening தேர்வு எழுதிய தோழர்களும்
JTO Phase - I பயிற்சி முடித்த தோழர்களும்
JTO பதவியில் நிரந்தரமாகப் பணி அமர்த்தப்படுவர்.
தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்