ஒப்பந்த ஊழியர்களுக்கு, ஒப்பந்ததாரர் மூலம் அடையாள அட்டை, EPF அட்டை, ESI மருத்துவ அட்டை போன்றவற்றை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, டில்லி தலைமையகம், அனைத்து மாநில பொது மேலாளர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது
=================================================================
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பள பட்டுவாடா வங்கி அல்லது காசோலை மூலம் தான் செய்ய பட வேண்டும் என வலியுறுத்தி, மாநில நிர்வாகங்களுக்கு கார்பரேட் அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
=================================================================
BSNL மருத்துவ திட்டத்தை மறு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில், ஊழியர் பிரிதிநிதி சங்கம் சார்பாக பங்கு பெறுவதற்கு தேவையற்ற நிபந்தனைகளை நிர்வாகம் பிறப்பித்தது. இதை நமது மத்திய சங்கம் கடுமையாக எதிர்த்தது . நமது எதிர்ப்புக்கு அடி பனிந்து விதிகளை தளர்த்தி 23.10.2015 அன்று கார்ப்ரேட் நிர்வாகம் மறுஉத்தரவு வெளியிட்டுள்ளது.
=================================================================
TM பயிற்சி முடித்து பதவிகள் இல்லாத காரணத்தால் இன்னும் TM பதவி உயர்வு பெறாத தோழர்களை பதவி உயர்வு,இறப்பு மற்றும் பணி ஓய்வு ஆகியவற்றால் காலியாகும் இடங்களில் பணியமர்த்தவும், அருகாமையில் உள்ள மாவட்டங்களில் சென்று TM ஆகப்பணி புரிய அவர்களின் சம்மதங்களை கேட்கவும் கார்ப்ரேட்அலுவலகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
=================================================================
கருணை அடிப்படையிலான பனி நியமன விண்ணப்பங்களை பரிசிலிக்கும் போது , இலாக்கா பனி விபத்துகளால் உயிர் நீத்த தோழர்களின் விண்ணப்பங்களை புள்ளி அடிப்படையில் நிராகரிக்க கூடாது என மனித வள இயக்குனருக்கு நமது மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
=================================================================
தோழமையுடன், E . கோபால், மாவட்ட செயலர்