Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Tuesday, October 20, 2015

இடைக்கால போனஸ் வழங்ககோரி நடைபெற்ற தர்ணா





இடைக்கால போனஸ் வழங்க கோரி நாடு தழுவிய தர்ணா போரட்டத்தின் ஒரு பகுதியாக நமது மாவட்டத்தில், சேலம், பொது மேலாளர் அலுவலகம் முன்பு  தர்ணா போராட்டம் சிறப்பாக நடைபெற்றது.

போராட்டதிற்க்கு தோழர்கள் S . சின்னசாமி, (NFTEBSNL), S . ஹரிஹரன், (BSNLEU), S . சுரேஷ் (AIBSNLEA) கூட்டு தலைமை தாங்கினர். 

தர்னாவை தோழர் S . தமிழ்மணி, BSNLEU தமிழ் மாநில உதவி செயலர் துவக்கி வைத்தார்.   தோழர் G . வெங்கட்ராமன், தமிழ் மாநில அமைப்பு செயலர், NFTEBSNL சிறப்புரை வழங்கினார். 

தோழர் M . சண்முகசுந்தரம், மாவட்ட செயலர், AIBSNLEA , தோழர் C . பாலகுமார், மாவட்ட செயலர், NFTEBSNL, தோழர் E . கோபால், மாவட்ட செயலர், BSNLEU ஆகியோர் கண்டன சிறப்புரை வழங்கினார்கள். 

மாவட்டம் முழுவதுலுமிருந்து, சுமார் 250 ஊழியர்கள், அதிகாரிகள், கலந்து கொண்ட இந்த தர்ணா போராட்டத்தை, தோழர் N . பாலகுமார், கிளை செயலர், BSNLEU, (GM அலுவலக கிளை) நன்றி கூறி நிறைவு செய்து வைத்தார். 

மாவட்டம் முழுவதுலுமிருந்து திரளாக பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும், மாவட்ட FORUM சார்பாக நன்றிகள். 

தோழமையுடன்,
E . கோபால்,
கன்வீனர், FORUM 
மற்றும் மாவட்ட செயலர், BSNLEU