Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, October 18, 2015

National Council - 33 வது தேசியக்குழு கூட்ட முடிவுகள்


Image result for round table meeting

National Council  - 33 வது தேசியக்குழு கூட்டம் 16.10.2015 அன்று டெல்லியில், மனிதவள இயக்குநர் திருமதி.சுஜாதா ராய் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

தேசிய கவுன்சில் ஊழியர் தரப்பு செயலுறும், நமது பொது செயலுருமான தோழர் P . அபிமன்யூ முதலில் புதியதாக பதவி ஏற்ற தேசிய குழு நிர்வாக தரப்பு தலைவர் திருமதி சுஜாதா ராய், அவர்களை அன்போடு வரவேற்றார். ஊழியர் சங்கங்களுடன் முறையான நேர்காணல் நிகழ்வுகளை (Formal meetings ) நடைமுறை படுத்தியதற்கு நன்றி கூறினார்.

பின்னர், ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உடனடியாக போனஸ் வழங்க வேண்டும் என கடுமையாக வலியுறுத்தினார். 19.10.2015 அன்று அனைவரும் ஒன்றிணைந்து போராட உள்ளதையும், போனஸ் வழங்காவிட்டால், போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்தார். 

மேலும், BSNL உடனடியாக 4G  சேவை வழங்க வேண்டும் என கோரினார். பதவிகள் பெயர் மாற்றம் செய்ய ஏற்படும் கால தாமதத்தை சுட்டி காட்டினார். BSNLMRS , E 1 சம்பளம் உள்ளிட்ட ஊழியர் பிரச்சனைகளையும் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார். 

கூட்ட தலைவர் இந்த விசயங்களை கவனமாக குறித்து கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின், வழக்கமான  நிகழ்வுகள் துவங்கின.  

கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

1. கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் நிலவும் பிரச்சனைகளை நாம் சுட்டி காட்டினோம் . குறிப்பாக இறந்த ஊழியரின் மகன் அல்லது மகள் பணி நியமனம் பெறுவது என்பது கடினமாக உள்ளது, அதே போல், தற்போதுள்ள அளவுகோல்களைத் தளர்த்தவும் வேண்டுகோள் விடுத்தோம்.  நிர்வாகம் சாதகமாக பரிசீலிக்க ஒத்துக்கொண்டுள்ளது.

2. 01/01/2007 முதல் 07/05/2010 வரை பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு TTA தோழர்களுக்கு வழங்கப்பட்டது போலவே ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வழங்கும் முடிவு பரிசீலிக்கப்படும்.

3. அகன்ற அலைவரிசை பழுது நீக்கும் பணி, Outsourcing செய்வதற்கு முன், அங்கிகரிக்கப்பட்ட சங்கங்களுடன் விவாதிக்கப்படும்.

4. 78.2 சத IDA இணைப்பில் 01/01/2007 முதல் நிலுவை வழங்குவது பற்றி  DOTக்கு கடிதம் அனுப்பப்படும்.

5. ஊழியர்களின் வாடகை இல்லா குடியிருப்பு தொலைபேசியில் 
இரவுநேர இலவசங்களை அளிப்பது ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. 

6. TTA ஆளெடுப்பு விதிகளில், (மாநில கேடர் பிரச்சனை)  திருத்தம் பற்றி  ஊழியர் தரப்பு 15 நாட்களுக்குள் தங்களது கருத்துக்களை அளிக்க வேண்டும்.

7. National Council நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்ட NEPP  பிரச்சினைகள் அமுலாக்கம் பற்றி 19/10/2015 அன்று கமிட்டி கூட்டம் நடைபெறும். ஊழியர் தரப்பு கருத்துக்கள் அதில், பரிசிலிக்கபடும்.

8. ERP திட்டத்தால், பணி நிறைவு பெறும் தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் பணி நிறைவு நாளன்றே வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் களையப்படும்.

9. சீருடை சம்பந்தமாக புதிய கொள்கை உருவாக்கபடும்.

10. விதி 8ன் கீழ் ஊழியர்களுக்கு மாற்றல் (Rule 8 Transfers ) வழங்குவதற்கு நிர்வாகத்தால் தடையாணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று நிர்வாகத்தரப்பு கூறியுள்ளது.
  
11. மிகுதி நேரப்படியை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும். ஏனைய படிகள் உயர்வு பற்றி பரிசீலிக்க இயலாது என தெரிவிக்கபட்டுள்ளது.

12. தவறுதலாக செய்யப்பட்ட பட்டுவாடாவை மீண்டும் பிடித்தம் செய்யக்கூடாது என்ற உச்ச  நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் அத்தகைய பிடித்தங்கள் இருந்தால் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றால், நிர்வாகம் கருணையுடன் அதை கையாளும். 

13.  பதவிகளின் பெயர் மாற்றப் பரிந்துரை, BSNL நிர்வாகக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. விடுபட்ட கேடர்களுக்கும் பெயர்  மாற்றம் பற்றி பரிசீலிக்கப்படும்.

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்