Site Maintained by S. HARIHARAN, District Secretary

Wednesday, April 22, 2015

நன்றி ! நன்றி !! நன்றி!!!



நாடு முழுவதும் 2 நாள் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. 2.25 லட்சம் அதிகாரிகள் , ஊழியர்கள் கிட்டத்தட்ட 100 சதம் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்று தேச பக்தி, நிறுவன பக்தியை வெளி படுத்தி உள்ளனர். 

நாடு முழுவதும் பெறும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த வேலை நிறுத்தம், நமது மாவட்டத்திலும் வரலாறு கானாத வெற்றியை பெற்றுள்ளது. 

வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்க, அல்லும் பகலும் அயராது உழைத்த FORUM தலைவர்கள், அனைத்து சங்க மாவட்ட செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை செயலர்கள், கிளை சங்க நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற  தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கு சேலம் மாவட்ட FORUM தனது நெஞ்சு நிறை நன்றியை உரித்தாக்குகிறது.

அதே போல், நமது நிறுவனத்தை காக்க, தங்கள் 2 நாள் ஊதியத்தை இழந்து, முழுமையாக நமக்கு ஆதரவளித்து, வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்ற அணைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் நமது நன்றிகள்.  

புரட்சிகர வாழ்த்துகளுடன், 
E . கோபால், 
கன்வீனர், FORUM மற்றும் 
மாவட்ட செயலர், BSNLEU