Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, September 8, 2014

30 அம்ச கோரிக்கைக்காக JAC நாடு தழுவியவேலை நிறுத்தம்...



போனஸ் உள்ளிட்ட பிரனைகளை தீர்க்கக் கோரி அதிகாரிகள் அல்லாத 
ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகுழுவின் JAC  கூட்டம் 
NFTE - BSNL பொதுச் செயலர் தோழர் C.சிங் அவர்கள் தலைமையில் 
5-9-14 அன்று டெல்லியில்நடைபெற்றது.

கன்வீனர் தோழர் P.அபிமன்யூ- G.S-BSNLEU அவர்கள்  பிரச்னைகளின்இன்றைய நிலையைப் பற்றி விரிவாக விளக்கி கூறினார்

கூட்டத்தில் BSNLEU, NFTE, BSNL MS, TEPU, SNATTA, BTEU, FNTOBEA, BTU and BSNL WRU ஆகிய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.  

அதன் பிறகு விவாதங்கள் தொடர்ந்தன.பிரச்னைகளை 
தீர்க்க வலியுறுத்தி இந்திய நாடு முழுவதும் கீழ்க்கண்ட இயக்கங்களை நடத்திட ஒன்றுபட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

* 23-09-14 அன்று தர்ணா - மத்திய,மாநில,மாவட்ட தலைநகரங்களில்.
* 30-09-14 அன்று இரண்டு மணி நேர வேலை நிறுத்தம்- 11 TO 13 Hrs. 

* அடுத்தகட்டமாக நவம்பர் மாதம் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வது.

கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றுபட்டு போராடுவோம்!
தோழமையுடன் 
E. கோபால், 
மாவட்ட செயலர்