Site Maintained by S. HARIHARAN, District Secretary

Saturday, August 2, 2014

அருமையான ராசிபுரம் கிளை மாநாடு


ராசிபுரம் கிளையின் 7வது மாநாடு 02.08.2014 அன்று சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்க்கு தோழர் N. சின்னதுரை, கிளை தலைவர் தலைமை தாங்கினார். தோழர் P.M. ராஜேந்திரன், அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர் R. கோவிந்தராஜூ, அனைவரையும் வரவேற்றார்.

 தமிழ் மாநில அமைப்பு செயலர் தோழர். S. தமிழ்மணி, மாநாட்டை துவக்கி வைத்து உரை ஆற்றினார். மாவட்ட செயலர் 
தோழர் E. கோபால், மாநாட்டு சிறப்புரை ஆற்றினார்.

மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் N. செல்வராஜூ, 
G. விஜய்ஆனந்த், கிளை செயலர்கள் தோழர்கள் ராஜலிங்கம், (திருச்செங்கோடு நகரம்), ராஜன் (திருச்செங்கோடு ஊரகம்), காளியப்பன் (சேலம் MAIN) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்கு சமர்பிக்கப்பட்டு, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. கிழ் கண்ட தோழர்களை உள்ளடக்கிய நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

         தலைவர் :தோழர் S. மாதேஸ்வரன், Sr.TOA 
        செயலர்  :தோழர் R. கோவிந்தராஜூ, TTA 
பொருளர்: தோழர் M. கந்தசாமி, TM  

 புதியதாக தேர்ந்தெடுக்க பட்ட நிர்வாகிகளை மாவட்ட சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது, அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

தோழமையுடன் E. கோபால், மாவட்ட செயலர்