தோழர்களே! நமது BSNL ஊழியர் நல வாரியம் -STAFF WELFARE BOARD -
BSNL ஊழியர் நல வாரியக்கூட்டம் 22/08/2014
அன்று டெல்லியில் CMD தலைமையில் காலை 11
மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது சங்கத்தின்
சார்பாக கீழ்க்கண்ட பிரச்சினைகள் கூட்டத்தில் விவாதிப்பதற்காக
கொடுக்கப்பட்டுள்ளது.
- கல்வி உதவித்தொகை SCHOLARSHIP விண்ணப்பிப்பதற்கான அடிப்படைச்சம்பளநிர்ணயத்தை உயர்த்துதல். REMOVAL OF BASIC PAY LIMIT.
- பல கல்வி நிலையங்களில் மதிப்பெண்களுக்குப் பதிலாக GRADE முறை அமுலில்இருப்பதால் புதிய வழிகாட்டுதல் அறிவிக்கப்பட வேண்டும்.
- தற்போதுள்ள கல்வி உதவித்தொகையை உயர்த்துதல்.
- குறைந்த வட்டியுடனோ, வட்டி இல்லாமலோ கல்விக்கடன் வழங்குதல்.
- FASHION TECHNOLOGY படிப்பை கல்வி உதவித்தொகை பெற அங்கீகரித்தல்.
- இறப்பு அன்று வழங்கப்படும் உதவித்தொகையை ரூ.25000/= என உயர்த்துதல்.
- இறப்பு அடையும் ஊழியர்களுக்கு ரூ.3 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்குதல். இதற்காகமாதந்தோறும் காப்பீட்டுத்தொகை பிடித்தம் செய்தல்.
- நலவாரிய நிதி ஒதுக்கீட்டை FUND உயர்த்துதல்.
- ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான அன்பளிப்பை உயர்த்துதல்.
- நலவாரிய நிதி ஒதுக்கீட்டை விரைந்து முடித்தல்.
- இயற்கை பேரழிவில் பாதிக்கப்படுவோருக்கு ரூ.10000/= உதவி அளித்தல்.
- மனமகிழ் மன்றங்களுக்கான நிதி உதவியை ரூ.10000/= முதல் 30000/= வரைவழங்குதல்.
- சுற்றுலா செல்ல வழங்கப்படும் உதவித்தொகை 2002ல் நிர்ணயம் செய்யப்பட்டது.இது உடனடியாக திருத்தி அமைக்கப்பட வேண்டும். 90 சத செலவு ஈடுகட்டப்படவேண்டும். 2000 KM வரை சுற்றுலா செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
- ஆய்வு இல்லங்களில் தங்குவதற்கான கட்டணத்தை உயர்த்துதல்.
- கிர் காடுகள்,டாமன் டையு மற்றும் போர்பந்தரில் HOLIDAY HOME விடுமுறை வீடுகளைகட்டுதல்.
- ஓய்வு பெற்ற ஊழியர்களை நலவாரிய உறுப்பினர்களாக அனுமதித்தல்.
- நலவாரிய உறுப்பினர் காலத்தை 3 ஆண்டுகளாக உயர்த்துதல்.தோழமையுடன் E. கோபால், மாவட்ட செயலர்