Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, March 1, 2021

BSNL CMD உடன் சந்திப்பு

சில முக்கியமான பிரச்சனைகள் மீது BSNL CMD உடன் BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு விவாதம்


BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P. அபிமன்யு, 26.02.2021 அன்று திரு P.K.புர்வார் CMD BSNLஐ சந்தித்து, சில முக்கியமான பிரச்சனைகளின் மீது விவாதம் நடத்தினார். சுமார் 80 நிமிடங்களுக்கு மேல் நடைபெற்ற இந்த விவாதத்தில் கீழ்கண்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன.


1) BSNLல் உண்ணாவிரதம், தர்ணா போன்ற போராட்டங்களுக்கு எதிரான வாய்ப்பூட்டு சட்டங்கள்:-

சமீப காலமாக, BSNLல் உண்ணாவிரதம், தர்ணா போன்ற அமைதியான போராட்டங்களைக் கூட தடை செய்ய வலியுறுத்தும் படியான உத்தரவுகளை கார்ப்பரேட் அலுவலகத்திலிருந்து கடிதங்களுக்கு மேல் கடிதங்கள் தலைமை பொதுமேலாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருவதை BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு சுட்டிக்காட்டினார். மேலும் சங்கங்களுக்கு இடையேயான ஒற்றுமையை குலைக்கும் வகையில், நிர்வாகம் ‘பிரித்தாளும் சூழ்ச்சி’யினை கடைபிடிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

அது போன்ற கொள்கையை நிர்வாகம் கடைபிடிப்பதில்லை என பதில் அளித்த CMD BSNL, உண்ணாவிரதம், தர்ணா போன்ற போராட்டங்களுக்கு எதிரான உத்தரவுகள் தொடர்பான புகாரை கவனிப்பதாக உறுதி அளித்தார்.

2) ஊதிய மாற்றம்:-

ஊழியர்களுக்கான ஊதிய பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டதற்கு தனது கடுமையான ஆட்சேபனையை, பதிவு செய்த பொதுச்செயலர், DoTயின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தான் இணைந்த ஊதிய பேச்சுவார்த்தைக் குழு உருவாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். மேலும், ஊதிய பேச்சு வார்த்தை நிறுத்தப்பட்டது என்பது, DoTயின் வழிகாட்டுதல மீறும் செயல் என்றும் தெரிவித்ததோடு, ஊதிய பேச்சு வார்த்தை உடனடியாக துவங்க வேண்டும் என்றும் கடுமையாக வலியுறுத்தினார்.

இந்த பிரச்சனையை பரிசீலிப்பதாக CMD BSNL உறுதி அளித்தார்.

3) இலாகா தேர்வுகள்:-

JTO LICE உள்ளிட்ட இலாகா தேர்வுகள் நடத்தப்படாமல் இருப்பதற்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை, நமது பொதுச்செயலர் பதிவு செய்தார். அதிகாரிகளுக்கான பதவி உயர்வுகளை அமலாக்கி விட்டு, ஊழியர்களுக்கு நடத்தப்பட வேண்டிய இலாகா தேர்வுகளை நடத்தாமல் இருப்பது பாரபட்சம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மறு சீரமைப்பு பணிகள் (காலி பணியிடங்கள் கணக்கிடுவதற்கான) நிறைவு செய்வதற்கு, குறைந்த பட்சம் நான்கு மாதங்களாவது ஆகும் என CMD BSNL பதிலளித்தார். 

JTO LICE தேர்வுகளை நடத்தும் பணியாவது உடனடியாக துவங்க வேண்டும் என்கிற பொதுச்செயலரின் கோரிக்கையை CMD BSNL ஏற்றுக் கொண்டார்.

4) SLA முறையில் OUTSOURCING:-

SLA முறையில் பணிகளை OUTSOURCING விட்டது ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்துள்ளதை சுட்டிக்காட்டிய பொதுசெயலர், இதன் காரணமாக நிறுவனத்தின் பணம் சூறையாடப்பட்டு வருவதையும் தெரிவித்தார். இந்த திட்டத்தை முழுமையாக பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்த முறையில் சில பலவீனங்கள் இருப்பதை CMD BSNL ஏற்றுக் கொண்ட போதும், வரும் காலத்தில் அவற்றை நிவர்த்தி செய்து விட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

5) ஒப்பந்த ஊழியர்கள்:-

80,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு திட்டத்தில் பணி ஓய்வு பெற்ற சூழ்நிலையிலும் கூட, பெருந்திரளான ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு தனது ஆட்சேபனையை, BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு தெரிவித்தார். இதற்கு மேலும் ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என்றும், அவர்களின் ஊதிய நிலுவையை, உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் CMD BSNLஐ கேட்டுக்கொண்டார்.

இந்த விஷயத்தை பரிசீலிப்பதாக CMD BSNL உறுதி அளித்தார்.

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர் 

தகவல் மத்திய மாநில சங்கங்கள்