நமது மாவட்ட சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம், வருகிற 27.02.2021 சனிக்கிழமை அன்று சேலம் செவ்வை தொலைபேசி நிலையத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்திற்கான ஆய்படு பொருள், நிகழ்ச்சி நிரல், உள்ளிட்ட விஷயங்கள் ஏற்கனவே செயற்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாநில செயலர் தோழர் A. பாபுராதா கிருஷ்ணன் சிறப்புரை வழங்கவுள்ளார்.
கொரானா பெருந்தொற்று அச்சம் காரணமாக, நாம் நடத்த முடியாமல் போன பணி நிறைவு பாராட்டு விழாவையும் செயற்குழுவின் ஒரு நிகழ்ச்சி நிரலாக, நாம் சேர்த்துள்ளோம். 31.01.2020 முதல் 31.01.2021 வரை பணி நிறைவு செய்த நம் தோழர்களே கிளை செயலர்கள் தொடர்பு கொண்டு, அவர்களை இந்த விழாவிற்கு அழைக்க வேண்டும். கிளை செயலர்கள் முனைப்புடன் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும்.
29.09.2020 செயற்குழுவிற்கு பின் நடைபெற்ற இயக்கங்கள், BSNL Outsourcing பணிகள், ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள், கிளைகள் மறுசீரமைப்பு, ஊழியர் பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் விவாதித்து முடிவு எடுக்கவேண்டியுள்ளது. எனவே செயற்குழு உறுப்பினர்கள், குறித்த நேரத்தில் தங்கள் வருகையை தவறாமல் பதிவு செய்ய வேண்டுமாய் தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன்
E. கோபால்,
மாவட்ட செயலர்
சிறப்பு தற்செயல் விடுப்பு உத்தரவு காண இங்கே சொடுக்கவும்