Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Monday, March 1, 2021

மாவட்ட செயற்குழு மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா

 


நமது மாவட்ட ங்கத்தின் செயற்குழு மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா, 27.02.2021 அன்று சேலம் செவ்வை தொலைபேசி நிலையத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் S. ஹரிஹரன், மாவட்ட தலைவர், தலைமை தாங்கினார்.  முதல் நிகழ்வாக, சங்க கொடியை, விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே தோழர் D. சுப்பிரமணி, STR கிளை செயலர் ஏற்றி வைத்தார்.  செவ்வை தொலைபேசி நிலைய கூட்ட அரங்கில் பின் துவங்கிய செயற்குழுவில், தோழர் P. செல்வம் மாவட்ட அமைப்பு செயலர் அஞ்சலியுறை வழங்க, மற்றுமொரு மாவட்ட அமைப்பு செயலர் தோழர் M. சக்திவேல் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். 

ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S. தமிழ்மணி செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை  வழங்கினார். பின்னர், தமிழ் மாநில செயலர் தோழர் A. பாபுராதாகிருஷ்ணன், சிறப்புரை வழங்கினார். அவர்தம் உரையில் நடைபெற்ற இயக்கங்கள், BSNL  நிறுவனத்தின் இன்றைய நிலை, ஊழியர் தரப்பு கோரிக்கைகள், ஊதிய மாற்றம், ஒப்பந்த ஊழியர் வழக்கு,  ஊதிய நிலுவை, VRS2019க்கு பிந்தைய நிலை, Outsourcing பணிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் உள்ளிட்ட பல விஷயங்களை  விளக்கி பேசினார்.

AIBDPA மாநில செயலர் தோழர் N. குப்புசாமி வாழ்த்துரை வழங்கியபின், 31.01.2020 முதல் 31.01.2021 வரை ஓய்வு பெற்ற நமது தோழர்கள், மாநில செயலரால்  கௌரவப்படுத்தப்பட்டனர். ஓய்வு பெற்ற தோழர்கள் நமது இயக்கத்திற்கு ஆற்றிய பணிகள் நினைவு கூறப்பட்டது.

உணவு இடைவேளைக்காக கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, பின் கூடியதும், TNTCWU  மாவட்ட  செயலர் தோழர் M. செல்வம், தோழர் C. பாஸ்கர்  மாநில உதவி செயலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.  2021 மார்ச் 7 முதல் 9  வரை சென்னையில் நடைபெறவுள்ள நமது மத்திய செயற்குழு கூட்டத்திற்கு, நமது மாவட்ட சங்கம் சார்பாக, நன்கொடை ரூ. 10,000 முதல் தவணையாக  மாநில செயலரிடம் வழங்கப்பட்டது .

அதற்குப்பின் ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி தோழர் E. கோபால் விளக்கவுரை வழங்கினார். கிளை செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள், விவாதத்தில் பங்குபெற்றனர். விவாதத்திற்கு பதில் அளித்து மாவட்ட செயலர் தொகுப்புரை வழங்கினார். உறுப்பினர் எண்ணிக்கைக்கு  ஏற்ப தற்போது உள்ள 23 கிளைகளை, 12 கிளைகளாக இணைப்பது, அதற்கு எதுவாக இரண்டு மாதங்களுக்குள் கிளைகள் இணைப்பு மாநாடுகள் நடத்துவது, அடுத்த செயற்குழுவை ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் நடத்துவது, ஜூன் மாதத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, ஒப்பந்த ஊழியர் ஊதிய நிலுவை பெற தொடர்ந்து இயக்கம் காண்பது உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டது. 

தோழர் K.  ராஜன், மாவட்ட அமைப்பு செயலர் நன்றி கூற கூட்டம் மாலை 6 மணி அளவில் நிறைவு பெற்றது.  சிறப்பான ஏற்பாடுகள் செய்த செவ்வை, STR கிளைகளை மாவட்ட சங்கம் மனதார பாராட்டுகிறது. 

தோழமையுடன், 
E. கோபால், 
மாவட்ட செயலர்