Salem District Union Welcomes You
Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Friday, January 8, 2021

DPE செயலருக்கு BSNLEU கடிதம்


ஊழியர்களுக்கு 01.10.2020 முதல் 5.5% IDA மற்றும் 01.01.2021 முதல் 6.1% IDAவும் வழங்காதது தொடர்பாக DPE செயலருக்கு BSNL ஊழியர் சங்கம் கடிதம்


மூன்று தவணை IDA வை முடக்கி வைக்கும் படி DPE உத்தரவிட்டுள்ளது. எனினும் 19.12.2020 அன்று DPE வெளியிட்டுள்ள உத்தரவில், அதிகாரிகளுக்கும், சங்கம் சாராத மேற்பார்வையாளர்களுக்கும் மட்டுமே இந்த IDA முடக்கம் பொருந்தும் என தெளிவாக தெரிவித்துள்ளது. எனவே மூன்று தவணை IDA முடக்கம், ஊழியர்களுக்கு பொருந்தாது என்பதே அதன் பொருள். 

எனினும், 01.10.2020 முதல் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய 5.5% IDAவையும், 01.01.2021 முதல் வழங்க வேண்டிய IDAவையும், வழங்குவதற்கான உத்தரவை DPE இதுவரை வெளியிடவில்லை. 

கேரள உயர்நீதிமன்றத்தில் BSNL ஊழியர் சங்கம் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளது. அதே சமயத்தில், 01.10.2020 முதல் 5.5%IDAவையும், 01.01.2021 முதல் 6.1% IDAவையும், ஊழியர்களுக்கு வழங்குவதற்கான உத்தரவை வெளியிட வேண்டும் என DPEயின் செயலருக்கு, 4.1.2021 அன்று BSNL ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. 

இந்நிலையில் கேரளா உயர் நீதி மன்றத்தில் நாம் தொடுத்த வழக்கு, 8.1.21 அன்று விசாரணைக்கு வருகிறது.

தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்  

தகவல்: மத்திய மாநில சங்கங்கள்

கடிதம் காண இங்கே சொடுக்கவும்