ஊழியர்களின் GTI திட்டத்தின், சட்ட திட்டங்களை இறுதிப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க, 04.01.2021 அன்று GROUP TERM INSURANCE (GTI)ன் கூட்டம் கார்ப்பரேட் அலுவலகத்தில் நடைபெற்றது. நிர்வாகத்தின் சார்பில் திரு சௌரப் தியாகி Sr.GM(Estt.), திரு A.M.குப்தா, Sr.GM(SR), திரு அஷுடோஷ் குப்தா, GM(Admn.), திரு P.D.சிரண்யா, GM(Fin-CFA), மற்றும் ஸ்ரீதிரிவேதிGM(Admn.),ஆகியோர் பங்கேற்றனர். LICயின் பிரதிநிதிகளும் அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். BSNL ஊழியர் சங்கத்தின் சார்பாக அகில இந்திய துணை தலைவர் தோழர் R.S.சவுகான் கலந்துக் கொண்டு, LICயின் முன்மொழிவுகளின் மீதான நமது சங்கத்தின் கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த திட்டத்தில், எதார்த்தத்தில் 70 சதமான ஊழியர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்பதால், 70 சதமான ஊழியர்கள் பங்கேற்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என அவர் கடுமையாக வாதிட்டார். மேலும், ப்ரீமியம் கட்டுவதில் அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் உள்ள பரபட்சம் களையப்பட வேண்டும் என்றும் தோழர் R.S.சவுகான் கேட்டுக் கொண்டார். ப்ரீமியம் தொகையை, ஆயிரத்திற்கு ரூ. 1.80 என்பதற்கு பதிலாக ரூ.1.60 என்றே நிர்ணயிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஊழியராக இருக்கும் போது GTI திட்டத்தில் நுழையும் ஒருவர் அதிகாரியாக பதவி உயர்வு பெறும் போது, அவர் அதிகாரிகளுக்கான GTI திட்டத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தோழர் சவுகான் முன்வைத்த BSNL ஊழியர் சங்கத்தின் கருத்துக்களை நிர்வாக தரப்பு வெகுவாக பாராட்டியது. ஊழியர்களுக்கான GTI திட்டம் 01.03.2021 முதல் அமலாக்கும் வகையில் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்,
E. கோபால்,
மாவட்ட செயலர்
தகவல்: மத்திய மாநில சங்கங்கள்