Site Maintained by E.Gopal, D/S.,Mobile No: 9443244399, Email ID: bsnleusalem@gmail.com

Sunday, February 10, 2019

அவசர மாவட்ட செயற்குழு - சேலம் - 07.02.2019

BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் அவசர செயற்குழு, மாவட்ட சங்க அலுவலகத்தில், 07.02.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் M . விஜயன், தலைமை தாங்கினார். மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஹரிஹரன், அஞ்சலியுறை வழங்க, மாவட்ட உதவி தலைவர் தோழர் K . ராஜன் அனைவரையும் வரவேற்றார். 

தமிழ் மாநில உதவி தலைவர் தோழர் S . தமிழ்மணி, செயற்குழுவை முறைப்படி துவக்கி வைத்து துவக்கவுரை வழங்கினார். மாவட்ட உதவி செயலர் தோழர் E . கோபால், ஆய்படு பொருளை அறிமுகப்படுத்தி விளக்கவுரை வழங்கினார். 

TNTCWU சேலம் மாவட்ட செயலர் தோழர் M . செல்வம், வாழ்த்துரை வழங்கினார். விவாதத்தில், செயற்குழு உறுப்பினர்கள் ( 34 தோழர்கள்) பங்குபெற்றனர். விவாதத்திற்கு மாவட்ட செயலர் பதிலுரை வழங்கினார். 

AUAB போராட்ட இயக்கங்களை வெற்றிகரமாக்குவது, கிளை, மாவட்ட மாநாடுகள், LONGSTAY பணி மாறுதல், ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள், நிதி நிலை உள்ளிட்ட பல பிரச்சனைகள் மீது முடிவுகள் எடுக்கப்பட்டது. கூட்டத்தை மாவட்ட பொருளர் தோழர் P . தங்கராஜ், நன்றி கூறி முடித்து வைத்தார். 

தோழமையுடன்,
E . கோபால்,
மாவட்ட செயலர்