Site Maintained by S. HARIHARAN, District Secretary

Thursday, October 15, 2026

இரண்டு BSNLகள் - குறை ஒன்றின் மீது?


காலாவதியான ஆதாரங்கள், பற்றாக்குறையான மனித வளம், ஸ்தம்பித்துப் போன சலுகைகள், காலதாமதமான பதவி உயர்வுகள் என இத்தனையும் இருந்த போதும், BSNL ஊழியர்கள் சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.  ஆனால், DEPUTATIONல் பணியாற்றும் நிர்வாகிகளுக்கு, முக்கியமான சலுகைகளும், பதவி உயர்வுகளும் கிடைத்துக் கொண்டே உள்ளன. இருந்த போதும், BSNLன் செயல்பாடுகள் தொடர்பாக கேள்விகள் எழும்போது, ஊழியர்களே அதற்கு பொறுப்பாக்கப் படுகின்றனர். கடினமான சூழ்நிலைகளிலும், இந்த நிறுவனத்திற்காக தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்கள் மீது, பழியை சுமத்துவதை தவிர்த்து, BSNLன் செயல்பாட்டை பாதிக்கும் உண்மையான பிரச்சனைகளை கவனித்து சரி செய்ய வேண்டும்.

தோழர் அனிமேஷ் மித்ரா பொதுச் செயலாளர் BSNLEU